மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் நீண்ட காலம் பணியாற்றியவர். தமிழ் இலக்கிய உலகிற்கும் பட்டிமன்றக் கலைக்கும் இவர் செய்த சேவையைப் பாராட்டி இவருக்கு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும், மத்திய அரசின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலம் தமிழ் மக்களின் இல்லங்கள் தோறும் பரிச்சயமான இவரது மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கும் பட்டிமன்றத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பெரிய இழப்பாகும்.