தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பினார் ஸெலென்ஸ்கி

ஜனாதிபதி ஸெலென்ஸ்கி மொல்டோவாவிலிருந்து நோர்ர்வேயின் ஆஸ்லோ நகருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, ​​விமான நிலையத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஆளில்லா வானூர்தி பற்றிய எச்சரிக்கை காரணமாகத்  ஸெலென்ஸ்கியின் மொல்டோவாவிலிருந்து புறப்படுவது தாமதமடைந்ததாக மொல்டோவா அரசாங்கப் பேச்சாளர் கூறியிருந்தார்.

ஆயினும், ஜனாதிபதியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ஸெலென்ஸ்கி ஆஸ்லோ சென்றிருந்தார்.

ஸெலென்ஸ்கி நோர்வேயிலிருந்து புறப்பட்டு, ஐஸ்லந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.

Leave a Reply