நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 25 பெண் கைதிகள் பெயர் குறிப்பிட்டனர்

குறித்த பெண் கைதிகள் தொடர்பில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவதாகவும், வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு விசாரணை, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதற்கமைய, இதுவரை 106 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 81 பேர் ஆண்கள் மற்றும் 25 பேர் பெண்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன், சாட்சிகளான 20 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை   விநியோகிக்குமாறும் கோரப்பட்டது.

சந்தேகநபர்களில் 23 பேர் (சந்தேகநபர் இலக்கம் 07 முதல் 30 வரை) அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பின் போது, சாட்சிகளாக ஆஜரான சிறைச்சாலை அதிகாரிகளால் அந்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அனைத்து 106 சந்தேகநபர்களையும் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அணிவகுப்புக்கு ஆஜர்படுத்தப்படாத ஏனைய சந்தேகநபர்களை வாட்ஸ்அப்   தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply