மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகளுக்காக திங்கட்கிழமை (07) முதல் பாடசாலைகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், 07 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட 06 ஆசிரியர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஹட்டன் கல்விப் பணிமனையின் ஊடாக அந்தந்த ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலாவை மற்றும் சாமிமலை ஆகிய பிரதேசப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. விசாரணைகளின் ஆரம்பத்திலேயே ஹட்டன் கல்வி வலய ஆசிரியர்கள் 06 பேர் இந்த மோசதியோடு தொடர்புடையவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 06 ஆசிரியர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மாவட்டச் செயலாளர் ஊடாகக் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. கல்வி அமைச்சின் செயலாளரும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இவர்களுக்கு எதிரான விசாரணைகளின் முதற்கட்டமாகவே இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட 06 ஆசிரியர்களும் மோசடியான முறையில் பெருந்தொகையான அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளைக் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திடம் செவ்வாய்க்கிழமை (08) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.