பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிப்பதுடன், கொழும்பிலுள்ள இந்திய வம்சாவழியினரையும் சந்தித்து உரையாடுவார். அவர் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவை வழிநடத்துவார்.