பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் ஆரம்பமாகி, பேரணியாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தைச் சென்றுடைந்தது. அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இப்போராட்டத்தில் பின்வருவோர் உட்படப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்:
- பாராளுமன்ற உறுப்பினர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்: செல்வராஜா கஜேந்திரன்
- முன்னாள் மாகாண சபை உறுப்பினர்: சந்திரலிங்கம் சுகிர்தன்
- நகர சபை தவிசாளர்: வின்சன் டி போல் டக்லஸ் போல்
- பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர்: உதயகுமார் யுகதீஷ்
- ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர்: வேந்தன்
இவர்களுடன் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் இதில் பங்கேற்றுத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.