பல மாகாணங்களுக்கு வலுவான இடி மின்னல் எச்சரிக்கை

நாடு முழுவதும் பல மாகாணங்களில் இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று (13) காலை 11.00 மணிக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அவதானிப்பு அறிவித்தலானது இன்று பிற்பகல் முதல் நாளை (14) அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் சில இடங்களில் மாலை நேரங்களிலோ  அல்லது இரவு வேளையிலோ இடி மின்னலுடன் கூடிய மழையும், சில வேளைகளில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இடி மின்னல் தாக்கத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில், திணைக்களம் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது:

  • இடி மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் திறந்தவெளிகள், மரங்களுக்கு அடியில் அல்லது விளையாட்டு மைதானங்களில் தங்குவதைத் தவிர்க்கவும்.
  • மின் இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் சாதனங்களின் பாவனையைத் தற்காலிகமாகத் துண்டித்துக்கொள்ளவும்.
  • பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் அல்லது முடக்கப்பட்ட வாகனங்களுக்குள் தஞ்சம் புகுவது சிறந்தது.

Leave a Reply