மட்டக்களப்பில் டகடந்த 2008 ஆம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளாக இருந்த முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (29) திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளாக இருந்த முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவராக தெரிவிக்கப்படும் லண்டனிலுள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸுக்கு தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.