புகலிடம் பெற்ற பின் மனம் மாறிய ஈரான் கால்பந்தாட்ட அணி அங்கத்தவர்

நேற்று இரவு தங்கியிருப்பதற்கு முடிவெடுத்த இரண்டு பேரிலொருவர் ஏற்கெனவே நாட்டை விட்டு வெளியேறிய சக வீராங்கனைகள் சிலரிடம் பேசியதாகவும் தனது மனதை மாற்றியதாகவும் குடியேற்ற அமைச்சர் டொனி புர்கே பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமது பாதுகாப்பு தொடர்பாக கரிசனைகளைக் கொண்டிருந்தமை காரணமாக தங்கியிருப்பதற்கு வீசாக்கள் வழங்கப்பட்ட ஐந்து வீராங்கனைகளையும் ஒரு வீராங்கனையும் பயிற்சியாளர் குழாமின் ஒரு அங்கத்துவருமாக இருவர் இணைந்திருந்தனர்.

எஞ்சிய ஈரானிய வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவை விட்டு நேற்றிரவு வெளியேறியிருந்தனர்.

மனம் மாறிய வீராங்கனையை ஈரானிய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு சக வீராங்கனைகள் தெரிவித்த நிலையில், ஏனையவர்கள் உடனடியாக இடமாற்றப்பட்டிருந்தனர்.