கண்காட்சி வளாகத்தில் சாதாரணமாக நடந்து சென்ற பிரதமர், பல்வேறு புத்தக விற்பனை நிலையங்களுக்குச் சென்று புத்தகங்களை பார்வையிட்டதுடன், புத்தக விற்பனையாளர்களுடன் நட்புடன் உரையாடி சில புத்தகங்களையும் கொள்வனவு செய்தார்.
அவரது எதிர்பாராத வருகை கண்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது.
பிரதமர் பொதுமக்களுடன் உரையாடியதுடன், பலருடன் செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.