வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா மாநகரசபைக்குரிய செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போனதாக, மாநகரசபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஜூன் 30) முறைப்பாடு செய்யப்பட்டது.