வவுனியாவின் கல்வி வளங்களில் ஒன்று அழிவின் வாயிலில்

2015 இருந்துவெற்றிகரமாக இயங்கிவந்த இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் (Vavuniya Ati – ஓமந்தை) மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் தருவாயில் உள்ளது. 2020 வரையும் HNDA, HNDIT, HNDE ஆகிய மூன்று பாடநெறிகள் காணப்பட்டது. தற்போது HNDIT பாடநெறி நீக்கப்பட்டு HNDA மற்றும் HNDE ஆகிய பாடநெறிகள் மட்டுமே காணப்படுகின்றது.

இம்முறை 2021 கல்வியாண்டிற்கான மாணவர்கள் ஆட்சேர்ப்பு நடைபெறும் வேளையில்,இலங்கை பூராகவும் 20000 மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்க பெற்ற வேளையிலும் Vavuniya Ati -ஓமந்தை பாடநெறியை தொடங்குவதற்கு தேவையான மாணவர் எண்ணிக்கையை பூர்த்தி செய்யவில்லை இதன் காரணத்தால் இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் வவுனியா (vavuniya Ati-ஓமந்தை) மூடப்படும் அபாயத்தில் உள்ளது.

2020 மற்றும் அதற்கு முன்னர் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய சித்தி அடைந்த மாணவர்கள் தம்மை இனைத்து கொள்ள முடியும். இங்குமுழுநேரம் மற்றும் பகுதிநேரமாக கற்றுக்கொள்ள முடியும். இது 100% இலவசமாக கற்றுக்கொள்ள முடியும்.இந்த வாய்ப்பை நாங்கள் தவற விடுவதன் மூலம் வருங்காலகளில் கல்விகற்ற உள்ள எமது மாணவர்களும் பாதிக்கபடுவார்கள் .

2015 முன்னர் HNDA பாடநெறி கற்பதற்காக எம்மவர்கள் பலர் திருகோணமலை மற்றும் யாழ் நோக்கி செல்லும் தேவைப்பாடு காணப்பட்டது . அவர்கள் தற்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றார்கள். இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் வவுனியா (vavuniya Ati- ஓமந்தை) மூடப்படுமாக இருந்தால் வவுனியா மாணவர்களுக்கு அதே நிலைமை ஏற்படும். அதை தடுக்கும் எண்ணம் இருப்பவர்கள் தகுதி உடைய மாணவர்களக்கு தெரியப்படத்துங்கள்.

மேலதிக தகவல்கள் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும். இனையவழியாகவும் விண்ணப்பிக்க முடியும்.வவுனியாவில் கற்பிக்கும் நான் அறிந்த சில ஆசிரியர்களை Tag செய்து உள்ளேன். நமதுமாணவர்கள் பலன் அடையட்டும் அதிகமாக பகிருங்கள்