6 ஆலயங்களில் ஒரே இரவில் தொடர் திருட்டு

மடுல்கலை, உன்னகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டீமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், உளுகங்கை ஸ்ரீ விநாயகர் ஆலயம், உளுகங்கை கம்பளிக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், தவலந்தன்னை கந்தகட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், அகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலேயே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

திருவுருவச் சிலைகளில் அணியப்பட்டிருந்த தங்க நகைகள், உண்டியல்கள் மற்றும் ஆலயத்தின் பல்வேறு பொருட்கள் பலவற்றை, திருடர்கள் மிகவும் சூட்சுமமாகத் திட்டமிட்டு ஒரே இரவில் பல ஆலயங்களிலிருந்து திருடிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவங்கள் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்தேறியுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பாகப் பன்விலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply