தவிர்க்க முடியாத பிளவு

(மப்றூக்)

எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போர் தொடங்கி விட்டது. முஸ்லிம் காங்கிரஸ§க்குள் கொஞ்சக் காலமாக இருந்து வந்த புகைச்சல், இப்போது காட்டுத் தீயாக எரியத் தொடங்கி விட்டது. மு.காங்கிரஸின் ‘தலை’களிடையே போர் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘போருக்கு முன்னரான குறிப்புகள்’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அவற்றில் ஏராளமானவை பலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

(“தவிர்க்க முடியாத பிளவு” தொடர்ந்து வாசிக்க…)

வைகோவின் ஆகாச வெடி: ‘இலங்கை தமிழரை திருப்பியனுப்பினால் கிளர்ச்சி வெடிக்கும்’

‘இலங்கை தமிழர் தயன்ராஜை இலங்கைக்கு அனுப்பும் முடிவை கைவிட வேண்டும்’ என இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக மாநில அரசிடம் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘இந்தியாவில் இலங்கை அரசின் ஆதிக்கம்தான் இன்னும் செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

(“வைகோவின் ஆகாச வெடி: ‘இலங்கை தமிழரை திருப்பியனுப்பினால் கிளர்ச்சி வெடிக்கும்’” தொடர்ந்து வாசிக்க…)

பிரஸ்ஸல்ஸில் விமான நிலையத்தில் வெடிப்புகள்: 34 பேர் பலி

பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸில் உள்ள சவென்டம் விமான நிலையத்துக்கு வெளியே இடம்பெற்ற இரண்டு வெடிப்பு சம்பவங்களில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் 170 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் வெளிநாட்டு செய்தி தெரிவிக்கின்றது. வெடிப்பு சம்பவமொன்றையடுத்து விமானநிலையத்தின் நுழை வாயிலிலிருந்து கரும்புகை மேலெழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரும்வரையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றுக்காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருக்கின்ற இரண்டு விமானங்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு எடுக்கப்பட்டிருந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொட்டம்மான் மீது சீறிப் பாயும் தமிழினி

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? : வெளிவராத உண்மைகள் : தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’ தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் (போராட்டகுறிப்புக்கள்)’ மற்றும் ‘போர்க்காலம் (கவிதை தொகுப்பு)’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவுக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 3.0 மணியளவில் கவிஞர் பொன். காந்தன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

(“பொட்டம்மான் மீது சீறிப் பாயும் தமிழினி” தொடர்ந்து வாசிக்க…)

அஞ்சலி: கலாபவன் மணி – “அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!”

(பனிமலரோன் )

பணம், செல்வாக்கு இருந்தாலும் இங்கிதமாகப் பழகுபவர்களை டவுன் டு எர்த் பெர்சனாலிட்டி என்பார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் நடிகர் கலாபவன் மணி. பழசை மறக்காத பக்குவம் அவரிடம் கடைசிவரையில் இருந்தது என்பதற்கு அவர் இறந்ததும் சாலக்குடியில் திரண்ட மக்கள் கூட்டமே சான்று.  கலாபவன் மணி இருநூறு தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறார். கேரள மாநிலம் தாண்டி, மதுரையில், கலாபவன் மணி ரசிகர்கள் மன்றம் இருக்கிறது. மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் போன்ற நகரங்களிலிருந்து ரசிகர்கள் கலாபவன் மணிக்கு இறுதி மரியாதை செய்வதற்காக சாலக்குடி வந்திருந்தது சாலக்குடி மக்களையும் மலையாளப் பட உலகையும் ஒருசேர நெகிழச் செய்தது.

(“அஞ்சலி: கலாபவன் மணி – “அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!”” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 6)

அண்ணன் பற்குணம் இறுதியாக படிக்க சம்மதித்தார்.ஆனால் பாடசாலையில் வகுப்புகள் தொடங்கிய சில மாதங்களின் பின்பே சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் சேர்ந்தார்.
படிக்க சேரும் முன்பு கஷ்டம் என்ற வார்த்தை எனக்கு சொல்ல வேண்டாம் என்பதையும் முன்னெச்சரிக்கையாக சொன்னார்.ஆனாலும் அவருக்கு வீட்டின் சூழல் தெரியும்.

(“பற்குணம் (பதிவு 6)” தொடர்ந்து வாசிக்க…)

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே அரசின் இலக்கு

அதிகாரங்களைப் பற்றிக்கொள்ளாது அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச ரீதியில் அரசியல் நிபுணர்கள் மற்றும் அரசியல் யாப்புக்கள் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது பற்றியே பேசப்படுகிறது. இது போன்று தானும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவே பதவிக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

(“அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே அரசின் இலக்கு” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்பு பணிகள் மேயில் ஆரம்பம்

அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள், மே மாதத்தில் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிய வருகிறது. நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கும் குறித்த பிரேரணை, அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள், மே மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்குமெனத் தெரியவருகிறது.

(“புதிய அரசியலமைப்பு பணிகள் மேயில் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(“பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)