வரதராஜபெருமாள் 

எனக்கு இவரைப்பற்றி அதிகம் தெரியாது.தகவல்கள் மூலமாகவே அதிகம் அறிந்திருக்கிறேன்.முன்னாள் பொருளாதார விரிவுரையாளரான இவர் வடகிழக்கு மாகாண முதல்வராக பதவி ஏற்றதன்மூலம் உலகறிந்த ஒரு மனிதராக பிரபலம் ஆனவர். இவரின் கீழே எனது சகோதரன் பணியாற்றிய காலங்களில் இவரைப் பற்றி கூறியிருக்கிறார்.நல்ல நிர்வாகி.நல்ல ஆக்கபூர்வமான செயற்பாட்டாளர்.இவரது செயலாளர் தாஜ் சமுத்திராவில் தங்குவார்.இவரோ செவன் ஐலன்ட விடுதியில் இருந்து கொண்டே வடகிழக்கு மாகாண சபையை எப்படி கட்டி எழுப்புவதென்றே யோசித்தவர். (“வரதராஜபெருமாள் ” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ வரை படத்துடன்..! கொழும்பில் ஊர்வலம்..?

ஆண்டு 1978 . அப்போது எனது வயது 22. கொழும்பு பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் காலடி வைத்து மிக சிறிய காலத்துள் கிழக்கில் பெரும் சூறாவளி வீசிய செய்தி வந்தது. ஓடிச்சென்று புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதை மீண்டும் பதிவதை தவிர்த்து அங்கு நான் பெற்ற அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்கிறேன்.

(“ஈழ வரை படத்துடன்..! கொழும்பில் ஊர்வலம்..?” தொடர்ந்து வாசிக்க…)

கொத்துரொட்டியும் கொள்கை வகுப்பும்

உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்
அதைவிட்டு இனியும்……. என்று ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

ஆயுத போராட்டம் ஆரம்பித்த போது எதிரிகளை தாக்குவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு எமது ஆயுத போராட்டத்திற்கான அங்கீகாரமும் முக்கியம் என்று அனைத்து விடுதலை இயக்கங்களுக்கே உணர்ந்திருந்தன விடுதலை புலிகளை தவிர . (“கொத்துரொட்டியும் கொள்கை வகுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

ஐதேகவுக்கு தனியாக அரசை அமைக்க முடியும் – மங்கள

நேற்று இரவு(26) ஜனாதிபதி மைத்ரியை , மங்கள சமரவீர மற்றும் சில முக்கிய ஐதேக பிரமுகர்கள் சந்தித்தனர். நல்லாட்சி அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, சுதந்திரக் கட்சி செயல்படுமானால் புரிந்துணர்வு ஒப்பந்தந்தை விட்டு மைத்ரி தரப்பை வெளியேறுமாறு சந்திந்த குழுவினர் கூறியுள்ளனர்.

(“ஐதேகவுக்கு தனியாக அரசை அமைக்க முடியும் – மங்கள” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் இயக்க மாவீரர்கள் பற்றி பார்வை….

1986 இலிருந்து புலிகள் மற்ற இயக்கங்களை அழித்து பாசிச ஆட்சி எடுத்தபின்னர் புலிகளில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் (75மூ) 13 க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வுநநயெபநச பாடசாலை மாணவர்கள். அதாவது குழந்தைப்போராளிகள். குடும்பத்தில் பாரபட்சம் காட்டப்பட்ட சிறாரும் சாதிய சமூகத்தால் பாரபட்சம் காட்டப்பட்ட தலித்தினரும் காதற் தோல்வி முதலிய பதின்மவயதுப்பிரச்சனைகளால் தற்கொலை மனநிலையோடு பாதிக்கப்பட்டோருமே இந்த பதின்ம பருவத்தில் புலிகளில் இணைந்தோரில் பெரும்பாலானவர்கள்.

(“புலிகள் இயக்க மாவீரர்கள் பற்றி பார்வை….” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் அதிகம்

(வாசுகி சிவகுமார்)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியாகப் பெயர்மாற்றம் பெற்றிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் பின் பத்மநாபா அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளும், இணைந்த வடக்கு−கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக் கூறுகிறார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வி…

(“தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் அதிகம்” தொடர்ந்து வாசிக்க…)

ஈ.பி.ஆர்.எல்.எவ் -சுரேஸ் அணி சொல்வதென்ன?

(கருணாகரன்)

ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை முடக்கிவிட வேண்டும் அல்லது அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத்தினர் இணைந்து வேலை செய்துவருகின்றனர். முக்கியமாக பல்வேறுபட்ட விதங்களில் எமது அங்கத்தவர்களுடன் பேரங்கள் பேசப்படுவதாகவும் அது பணமாகவோ, எதிர்காலப் பதவிகளை இலக்குவைத்து உத்தரவாதங்கள் வழங்கப்படுவதாகவோ அறிய முடிகிறது.

(“ஈ.பி.ஆர்.எல்.எவ் -சுரேஸ் அணி சொல்வதென்ன?” தொடர்ந்து வாசிக்க…)

வாய்வீர ஐயனே

புலிவாலில் தொங்குவதிலோ, ஏன் வெறும் புலி எதிர்ப்பிலோ எங்கள் அடையாளம் இல்லை. உங்களைப் போன்றவர்களுக்கு புலி என்ற முகமூடியைக் கழற்றினால் எந்த தனித்துவமான அடையாளமும் கிடையாது. நாலு பேரைச் சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துக்களைச் சொல்வதற்கான சிந்தனை வளமும் கிடையாது. உங்களால் முடிந்ததெல்லாம் மந்தைக் கூட்டத்தின் லைக்குகளுக்காக படம் போடுவதும் காட்டுவதும் மட்டுமே!

(“வாய்வீர ஐயனே” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியா கடை எரிப்பு

வவுனியா கடை எரிப்பு விவகாரம், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா அல்லது விபத்தா என்ற கோணத்தில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான விசாரணை அறிக்கை வந்த பின்னர், குறித்த கடை, திட்டமிட்டு எரிக்கபட்டதென்றால், நாம் கண்டனத்தைப் பதிவு செய்வோம்”” என்று, வவுனியா மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

(“வவுனியா கடை எரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சியின் கூட்டு உடைகிறது…?

நல்லாட்சியின் கூட்டுக்குள் ​பாரிய நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்தக் கூட்டு உடைந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக, நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

(“நல்லாட்சியின் கூட்டு உடைகிறது…?” தொடர்ந்து வாசிக்க…)