கரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்காத நாடுகள் எவை, என்ன காரணம்?

கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ், உலக நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து ஆட்டிப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11.3 லட்சம் மக்களிடையே கரோனா தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2,36,000 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, விலை மதிப்பில்லாத உயிர்கள்.

கரோனா நோய் தொற்று: ஏன் அமெரிக்காவில் மட்டும் இந்த அளவுக்கு பாதிப்பு?: என்ன காரணம்? வெளியான புதிய தகவல்கள்

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் அமெரி்க்க மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மிக அதிகமாகும். இந்த அளவுக்கு பாதிப்பு அமெரிக்காவில் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் எதிர்வினை மிகையானதா? கொரோனா தொற்று இதுவரை ஐரோப்பிய மற்றும் சீன பாதையில் செல்லவில்லை..

எச்சரிக்கையான நம்பிக்கையே தற்போதைய தேவை….

டாக்டர் என். தேவதாசன் ஒரு பொது சுகாதார நிபுணர். ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். உலக சுகாதார நிறுவனத்துடன் இந்தியாவில் தொற்று நோய்களுக்கான தேசிய திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் வடிவமைப்பிற்கு பெரும்பங்காற்றியவர். பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் மூன்று நிபா தொற்று உட்பட பல்வேறு தொற்றுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். தற்போது ஹெல்த் சிஸ்டம்ஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் பிளாட்ஃபார்ம் (Health Systems Transformation Platform) எனும் அமைப்பிற்கு தொழில்நுட்ப ஆலோசகராக உள்ளார்.

கொரனா: தீமையிலும் நன்மை

(சாகரன்)

கொரனாத் தீமை உலகை உலுக்க ஆரம்பித்த 2020 வருட ஆரம்பத்திற்கு முன்பு உலகை பெரியளவில் உலுகிக் கொண்டு இருந்த விடயம் பூமி வெப்பமடைதல் என்ற விடயமாகும். இது தொழில் புரட்சி ஏற்பட்ட பின்பு விவசாயம் நகரமயமாக்கப்பட்டதிற்கு பின்னரான கால கட்டங்களை விட அதிகம் வீச்செடுத்தது என்றால் மிகையாகாது.

இலங்கை அகதிகள் முகாமில் உதவிகள் தொடர்கின்றன….

மதுரை உச்சப்பட்டி யில் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் 451 குடும்பங்கள் வசித்துவருன்றன. இவர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் கூலி வேலைசெய்து வாழ்பவர்கள்.

பேரிடர் காலம்: இது கொண்டாட்டத்திற்குரிய காலம் அல்ல….

(சாகரன்)

உயிரினங்கள் இயல்பில் கொண்டாட்ட குணாம்சங்களை தன்னகத்தே அதிகம் கொணடவைதான். தென்றல் காற்றுத் தாலாட்டை ரசிக்காத மரங்கள் இல்லை. தனது இன விருத்திக்கான மகரந்த சேர்க்கையை வரவேற்று தலையை ஆட்டி அவைகள் கொண்டாடும்.

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்

(நளினி ரட்ணராஜா)

கொரோனா என்ற கொடிய அசுரன் இந்த மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பதோடு மனிதகுலத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். அவனுக்கு ஜாதி, மதம், இனம், நாடு, தேசம், பணக்காரர், ஏழை போன்ற வேறுபாடுகள் தெரியாது, புரியாது.

மூடு திரையும் கொரோனாவும்

(Balasingam Sugumar)

கொரோனாவும் வீட்டில் தங்கியிருத்தலும்

இங்கு நானும் ஒரு அன்றாடம் காய்ச்சிதான் வேலைக்கு போனால் மட்டுமே சம்பளம் நாம் எத்தனை மணித்தியாலம் வேலை செய்கிறோமோ மணித்தியாலக் கணக்கில்தான் சம்பளம் பெற முடியும் வாரத்துக்கு ஒரு முறை சம்பளம்.

கொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை

(சு.வெங்கடேசன்)

முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப்பற்றி எழுத முடியவில்லை. தொற்றுநோயாளிகளைக்கண்டு பயந்து, விலகி அவர்களை ஊரைவிட்டே விரட்டி, தான் தப்பித்து வாழ எல்லா வகையான உத்திகளையும் கையாண்ட அழுக்கேறிய, குரூர மனநிலையுள்ள மனிதர்களா நாம் என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது.

சமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்!

இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம். அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு ஏற்ற வீடுகள், மருத்துவக் காப்பீடு, தண்ணீர் வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. மேற்கூறிய ஏதும் அற்றவர்களைப் பசி, தொற்று ஆகியவற்றுக்கு ஆளாகும்படி தூக்கியெறியும் ஒரு உத்தியைத் தேர்ந்தெடுத்ததை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?