ஆதரவு கரம் நீட்டினார் – JVP அனுர

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ​தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்தியா – இலங்கை கடல்வழி மின்பாதை திட்டத்தை கைவிடுக

இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக் கூடாது, எனவே கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை – மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “நானே பிரதமர்“ என மீண்டும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். “தான் பிரதமர் இல்லாத, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்கவும் முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசாங்கத்துடன் பேசவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

துயிலும் இல்லம் முன்பாக இருந்து ராஜபக்‌ஷர்களுக்கு எதிர்ப்பு வெடித்தது

ராஜபக்‌ஷர்களை எதிர்த்து வடக்கிலும் இன்று (23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான கண்டன பேரணிக்கு முச்சக்கரவண்களின் சாரதிகளும் முச்சக்கரவண்டிகளுடன் தங்களுடைய ஆதரவை நல்கினர்.

குறைந்த விலையில் உணவகங்கள்: புதிய திட்டம்

நாடளாவிய ரீதியில் குறைந்த கட்டணங்களைக் கொண்ட உணவகங்களை திறப்பதற்கான யோசனை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 18 பேர் அகதிகளாக தஞ்சம்

மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர்.  யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து கடல் வழியாக இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள சேராங்கோட்டை எனும் பகுதியை சென்றடைந்துள்ளனர். 

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்: 5 பேருக்குப் பிணை; 55 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

(கனகராசா சரவணன்)

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முக்கியஸ்தரான சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தது தொடர்பாக   காத்தான்குடி பிரதேசத்தில்   சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த  60 பேரில் 5 பேர் இன்று (22) வெள்ளிக்கிழமை   பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

’சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும்’

அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை மாற்ற வேண்டும் . சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகள் மூலமோ இந்த நிலைமையை மாற்ற முடியாது எனவும் அறிவு ரீதியாக அனைவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும் எனவும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாநகர சபை ஒருங்கிணைப்பாளர் எம் . தீபன் தெரிவித்துள்ளார்.