பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திகானுக்கு பயணம்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 60 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று வத்திக்கானுக்குச் சென்றுள்ளனர்.  குறித்த தூதுக்குழுவினர் இன்று(22) அதிகாலை வத்திக்கானுக்குச் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ளனர். இதனை அருட்தந்தை ஜூட் கிறிஷாந்த உறுதிப்படுத்தியுள்ளார்

கால எல்லையை நீடித்தது இந்தியா

இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்வதாகவும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது

லெனின் ஏன் நமக்கு என்றும் தேவைப்படுகிறார்?

பாரதியால் ‘ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி/ கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!’ என்று புகழப்பட்டது ரஷ்யப் புரட்சி. அந்தப் புரட்சியின் தலைவர் லெனின். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்த மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர் லெனின்.

உக்ரைனின் மரியுபோலை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “உக்ரைனிடமிருந்து மரியுபோலை விடுவித்துவிட்டோம். வீரர்களுக்கு பாராட்டுகள். மரியுபோலின் மிகப் பெரிய இரும்பு ஆலையைக் கைப்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மக்களின் பங்கு?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்ப் பரப்பிலுள்ள சில தரப்புகளால், “..ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், தென் இலங்கை மக்களின் வயிற்றுப் பசிக்கான பிரச்சினை. அதில் பங்களிப்பது அவசியமற்றது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து, வேடிக்கை பார்க்க வேண்டும்….” என்கிற கருத்துருவாக்கம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் அதைத் தலையாய பணியாக ஏற்றும் செயற்படுகின்றனர்.

மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான பிரேரணை ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சஹான் பிரதீப் வித்தாரண, கொண்டுவந்த பிரேரணைக்கே இவ்வாறு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்த ரஷ்யா

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது புதிய “சர்மட்  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை” சோதனை செய்ததாக இன்று கூறுகிறது. நாட்டின் வடமேற்கில் உள்ள பிளெசெட்ஸ்கில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட ஏவுகணை, ரஷ்யாவை அச்சுறுத்துபவர்களுக்கு சிந்தனைக்கான வாய்ப்பை வழங்கும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறுகிறார்.

‘கோட்டா வெளியேறு’: போராட்டத்தின் முடிவு என்ன?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கடந்த மார்ச் 31ஆம் திகதி, மிரிஹானையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சொந்த இல்லத்துக்கு முன்னால் ஆரம்பித்த பொதுமக்களின் போராட்டம், இன்னமும் தொடர்கிறது.

காலி முகத்திடல் முற்றுகை: செவிசாய்க்காத அரசாங்கம்

(மொஹமட் பாதுஷா)

நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னொருபோதும் இல்லாத பொருளாதார பின்னடைவுகள், அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன. அரசியலை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை ஒன்றின் ஊடாகவே, பொருளாதார நெருக்கடிகளையும் தீர்த்தாக வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலை இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சியில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா?

(என்.கே. அஷோக்பரன)

வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான வழியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமித்த குரலில் “கோட்டா கோ ஹோம்” (கோட்டா வீட்டுக்குப் போ), “ராஜபக்‌ஷ கோ ஹோம்” (ராஜபக்‌ஷர்கள் வீட்டுக்கு போ) என பலமான கோஷத்தை எழுப்பி வருகிறார்கள்.