யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றினுள் நடந்த ஆய்வினைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்

யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றினுள் நடந்த ஆய்வினைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்

பெயர்க் காரணம்: பண்டைய காலத்தில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததால் இதன் ஆழம் வானில் உள்ள நிலா வரைக்கும் என சொல்லப்பட்டதால் இதன் பெயர் நிலாவரை என உருவாகியது.

திருநங்கைகளுக்கு எதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள்

பாகிஸ்தானில் அண்மைக் காலமாக திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுமார் 10,418 திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆடை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட  தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை விவகாரம்; கைது வேட்டையில் பொலிஸார்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

லடாக் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வை தேடும் இந்தியா

கிழக்கு லடாக் செக்டாரில் உள்ள ரோந்துப் புள்ளி-15க்கு அருகில் உள்ள கோக்ரா ஹைட்ஸ்-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் இராணுவங்கள் பிரிவினை செயல்முறையை நிறைவு செய்துள்ளன. இரு தரப்பினரும் உராய்வு புள்ளியில் இருந்து துருப்புக்களை பின்வாங்கிய பின்னர் மற்றவர்களின் நிலைகளை சரிபார்த்துள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடன் மறுசீரமைப்பு பேச்சை ஆரம்பித்தது இந்தியா

இலங்கையுடனான தனது கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவத் தயார் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

பகலுணவாக தேங்காய் துண்டுகளை கொண்டுவந்த மாணவி

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  தரம்-9 இல் கல்விப்பயிலும் அந்த மாணவி, கற்பதில் கெட்டிக்காரி மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார்.

காலைக்கூட்டத்தால் தினமும் மயங்கி விழும் மாணவர்கள்

இலங்கையின் பிரதான பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் தாம் திருப்தியடையவில்லை என்றும் குறித்த சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகிறார். அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குருந்தூர்மலையை அண்டி பௌத்தக் கட்டுமானம்; மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால்  இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம்

(என். கே அஷோக்பரன்)

சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது.