இன்னொரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியமும் சவால்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல, ‘இலவுகாத்த கிளி’யாக, நிலைமை சீராகும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

மணித்தியாலத்துக்கு 32 பேர் பறக்கின்றனர்

புதிய அறிக்கைகளுக்கு அமைய இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 32 இலங்கை பிரஜைகள் வெளிநாடு செல்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இலங்கைக்கு நிபந்தனை விதித்த ஏரோஃப்ளோட்

ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான இராஜதந்திர நட்புறவுக்கு அமைய கொழும்பில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் தீர்மானித்துள்ளது.

விரைவில் பதுங்கு குழிக்குள் ஒளிய நேரிடும்

வானளாவ உயரும் வாழ்க்கைச் செலவு, வட்டி வீத அதிகரிப்பு மற்றும் பல பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெறுவதை தடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அடக்குமுறையை கையாள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில், சர்வாதிகாரியாகச் செயற்பட முயல்வதாக குற்றம் சுமத்தினார்.

மயிலிட்டியில் கவனயீர்ப்பு..!

வலி.வடக்கு பலாலி, மயிலிட்டி பகுதிகளான எமது பூர்வீகக் காணிகளை விடுவிப்பது எப்போது….?மயிலிட்டியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்…அரசியல்வாதிகளோ மௌனம்…!

இந்தியா செல்ல முயன்ற 12 பேருக்கு ஏற்பட்ட நிலை

மன்னார் – தாழ்வுபாடு கடல் பகுதியூடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டதோடு, ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மருதானையில் பதற்றம்

அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானை டீன்ஸ் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பியா: கடன் பொறிக்குள் சிக்கிய நாடு

இலங்கையைப் போலவே கடன் பொறியில் சிக்கி, பொருளாதார நெருக்கடியில் அல்லல் படும் ஒரு நாடுதான் சம்பியா. சீனாவிடமிருந்து தான் பெற்ற அதிக கடனுக்காக தனது நாட்டின் கேந்திர முக்கியத்துவமிக்க, பெறுமதிமிக்க இடங்களை பறிகொடுத்து வரும் நாடுதான் சம்பியா.

சிரியாவில் அகதிகள் படகு விபத்து: 77 பேர் உயிரிழப்பு

சிரியாவின் ஆர்வட் தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் அகதிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகில்  லெபனான், சிரியா மற்றும் பலஸ்தீன நாடுகளைச் சேர்ந்த 120 பேர் பயணித்துள்ளனர். அனர்த்தம் இடம்பெற்றதை அடுத்து 20 க்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டு சிரியாவின் டாடாஸ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.