கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை மே 16 ஆம் திகதி வரை நடத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (07) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Month: April 2025
IPKF நினைவிடத்தில் மோடி அஞ்சலி
பத்தரமுல்லையில் உள்ள IPKF நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய அமைதி காக்கும் படையின் துணிச்சலான வீரர்களை நாங்கள் நினைவு கூர்கிறோம். அவர்களின் அசைக்க முடியாத துணிச்சலும் அர்ப்பணிப்பும் நம் அனைவருக்கும் உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது
‘விபூஷண விருது கிடைத்தது மாபெரும் கௌரவம்’
“மலாயன் கபே”க்கு காலை உணவு
அமெரிக்க பொருட்களுக்கு 34 வீத வரி விதித்தது சீனா
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 வீத தீர்வை வரியை விதிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் புதிய வரித் திருத்தம் அமுலாகும் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியினால் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தீர்வை வரிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தீர்வை வரியை அதிகரிப்பது தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச வர்த்தக சட்டத்திற்கு முரணானதென சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கில்: புதிய இயந்திர பாதை…
இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்;போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள், வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மிக நீண்டகாலமாக மிக மோசமான நிலையிலிருந்த பாதையானது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் அடிப்படையில் புதிய பாதை சேவையாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உதவி திட்டங்கள் அங்குரார்ப்பணம்
இந்திய-இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை
தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடி சந்திப்பு
இந்தியப் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்த இந்திய் பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் முப்படை வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.




