“யாருடைய பாதுகாப்பும் தேவைப்படாது”

மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட நாட்டைப் பாதுகாக்க உலகில் வேறு எந்த நாட்டுடனும் எந்த பாதுகாப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழுவினர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுத் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களை விசேட அதிரடிப் படை (STF) கைது செய்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“பயணிகள் தயங்க வேண்டாம்”

புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் பயணிகளிடம், நீண்ட தூரச் சேவை பேருந்துகளால் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவைகளால் ஏற்படும் அநீதிகள் குறித்து சுமார் 200 புகார்கள் தேசிய போக்குவரத்து ஆணையத்திற்கு (NTC) கிடைத்துள்ளதாக அந்த ஆணையத்தின் பணிப்பாளர் ஜெனரல் நவோமி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

“வன்முறை அற்ற நாட்டைக் கட்டியெழுப்பு​வோம்“

முன்னர் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்கு சென்றன. அதனால்தான் கிராமங்கள் அபிவிருத்தியடையவில்லை. எதிர்கால சந்ததியினருக்காக, போரின் வலியையும் வன்முறையையும் அனுபவிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைவோம். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’’சூத்திரதாரிகளை மறைப்பதே விசாரணைகளின் உள்நோக்கம் ’’

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயங்கரம் 2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறுகிறார்.

21/4 : நேர்மறையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் சில நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

மத்திய மாகாணம் மற்றும் கேகாலை, பதுளை பிரதேசங்களில் நாளை (21) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகல் நேர சுற்றுலா வரி உயர்வு

இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில், பகல் நேர சுற்றுலா வரியை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரம் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இது யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அங்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

21/4 தாக்குதல்கள் தொடர்பான முழு அறிக்கை CID யிடம் ஒப்படைப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானும் ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலும்

(Sharthaar M M Jameel)

பிள்ளையானைப் பற்றி எதைச் சொன்னாலும் நம்பும் தமிழ் சமூகம் ஏன் “ஈஸ்டர்” தாக்குதலை பிள்ளையான் செய்தார் என்பதை முழுமையாக நம்புவதில்லை என ஒருவர் பேஸ்புக்கில் ஆதங்கப்பட்டிருந்தார். அது என் சிந்தனையைத் தூண்டியது.