

The Formula
வக்பு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. மேலும், வக்பு வாரியங்கள், கவுன்சில்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் நிராகரித்ததாக அநுர அரசு கணக்குப் பார்க்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஹல்துமுல்ல நகருக்கு அருகில் மலையிலிருந்து உருண்டு விழுந்த பல பாறைகள் வாகனத்தின் மீது விழுந்ததில் கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் கடுமையாக சேதமடைந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. காரில் நான்கு பேர் பயணித்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டிவிட்டது. அவற்றில், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.