சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது போல், அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமரை மாற்றுவது குறித்து அரசாங்கம் எந்த விவாதமும் நடத்தவில்லை என்று அமைச்சர் லால் காந்த இன்று தெரிவித்தார். அமைச்சரவையை மறுசீரமைப்பது அல்லது பிரதமரை மாற்றுவது குறித்து அரசாங்கத்திற்குள் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், ஊடகங்கள் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “அத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லை. அரசாங்கத்தில் எந்த உள் மோதல்களும் இல்லை. இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுபவர்களின் தலையை சரிபார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்
Month: May 2025
வயது குறைந்த கர்ப்பம் எங்கு அதிகம் தெரியுமா?
இலங்கையில் உள்ள பிற பிரதேச செயலகப் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது, அதிக போதைப்பொருள், துஷ்பிரயோகம் சதவீதம், அதிக போதைப்பொருள் கடத்தல் சதவீதம் மற்றும் வயது குறைந்த கர்ப்பம் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் அதிகரித்துள்ள பிரதேச செயலகப் பிரிவாக, கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கதிர்காமம் பிரதேச செயலாளர் பிரதீப் குலதிலக கூறுகிறார்.
தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு
“தவறினால் சட்ட நடவடிக்கை”
அண்மையில் முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார நிதி விவரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27) நள்ளிரவுக்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் தேர்தல் ஆணைக்குழு உறுதியாக உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.
“தேங்காய் விலை மேலும் உயரும்”
”கைது செய்யப்படவுள்ள 40 முன்னாள் எம்.பிக்களின் பெயர் பட்டியல் வெளியீடு”
இரவுப் பொழுது உல்லாசத்தை அதிகரிக்க அனுமதி
மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
(Mlm Mansoor)

கடந்த 19 ஆந் திகதி தலைநகர் கொழும்பு போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இலங்கையின் உள்நாட்டுப் போரில் (1979 – 2009) உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் 16 ஆவது தேசிய நிகழ்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் ஒரு பெரும் சூறாவளியை கிளப்பியிருப்பதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்களில் ஓரளவுக்கு பலவீனமடைந்திருந்த NPP இன் வாக்கு வங்கியில் அநேகமாக மேலும் ஒரு சரிவு ஏற்படுவதற்கு வழிகோலள முடியும்.
புட்டினுக்கு பைத்தியம்: டிரம்ப் காட்டம்
உக்ரேன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார். குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி புதினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

