யாழ் மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி கூட்டு ஆட்சி

யாழ் மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி கூட்டு ஆட்சியை பிடித்துள்ளது. இன்று (13) காலை நடந்த முதல்வர் தெரிவில், இலங்கை தமிழரசு கட்சியின் முதல்வர் வேட்பாளர் மதிவதனி, வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். அவருக்கு ஆதரவாக 19 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளருக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இலங்கை தமிழரசு கட்சிக்கு, உள்ளூராட்சிசபை பங்காளியான ஈ.பி.டி.பி ஆதரவளித்தது.

புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமனம்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க சிறைச்சாலைத் துறையின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை நீதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க பதில் ஆணையாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானத்திற்குள் இருந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது

இன்று பிற்பகல் குஜராத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் அருகே இருந்த குடியிருப்பில் விழுந்து நொறுங்கியது.  இந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  இதற்கிடையே விமானத்தில் உள்ளே இருந்தது எந்த நாட்டை சேர்ந்தவர்கள்.. குழந்தைகள் எத்தனை பேர். பெரியவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

விலங்குகள் கணக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன

வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

வெருகல் படுகொலையில் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு

ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை ஏற்றிவந்த அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 வருடங்களாகியும் நீதியும், நிவாரணங்களும் கிடைக்காத நிலையில் குறித்த நினைவேந்தலை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து வியாழக்கிழமை (12) அன்று  ஏற்பாடு செய்தனர்.

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு இன்று (12) அளித்துள்ள செவ்வியொன்றின்பேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விமான விபத்து: 242 பயணிகள் பயணித்துள்ளனர்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதை மாநில அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

SJB இன் ஆதரவுடன் மாநகர சபையை நிறுவியது ITAK

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று தெரிவித்தார்.

6 வருடங்களாக தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த இலங்கையர்

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

அ‘புர சிறை கண்காணிப்பாளருக்கு விளக்கமறியல்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபரை ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற பெயரில் சட்டவிரோதமாக விடுவித்ததற்காக அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மோகன் கருணாரத்னவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.