ஒரே சிந்தனையில் இணைந்து பயணமாதல்


(சாகரன்)

தமிழ் மக்கள் அரங்கம் என்ற குடையின் கீழ் சகல தமிழ் பேசும் அரசியல் அமைப்புகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் வடக்கு கிழக்கு மகாண சபையின் முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் ஒரு பெரு முயற்சியில் ஈடுபட்டார்.

கிழக்கின் STF படுகொலைகள்

(புதிய விடியல் யாழ்ப்பாணம்)

பலபேருக்கு இந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை பொறுமையாக வாசித்துப் பாருங்கள்(நினைவூட்டல்) “ஜிகாத்’ முஸ்லிம் ஊர்காவல் படையினர், இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்த மறவா வடுக்கள்.

”இனி கடைசி பென்ச் என்ற முறை இல்லை”

தமிழக பாடசாலைகளின் வகுப்பறைகளில் ‘ப’ வடிவத்தில் இருக்கைகளை மாற்றி, மாணவர்களை அமரவைக்குமாறு பாடசாலைக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடைசி பென்ச் என்ற நடைமுறை இருக்கக் கூடாது என்றும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேலையின்மை குறைந்தது

இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 4.5 சதவீதமாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: 21ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

நகர்த்தல் பத்திரம் மூலம் வெள்ளிக்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு, எதிர்வரும்  21ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வட கடலில் சிக்கிய பாரியளவு கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் – எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று (12) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதி கொண்ட சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 

“வடக்கில் 33 மருத்துவமனைகளில் தாதியர்கள் இல்லை”

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய மருத்துவமனைகள்,  உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தாதியர்களை நியமிப்பதன் மூலம் குறித்த  வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். நயினாதீவு பிராந்திய மருத்துவமனையில் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

எல்ல சுற்றுலா விடுதி எரிந்து நாசம்

எல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கந்தே கும்புர பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் சுற்றுலா விடுதி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டு. போதை பொருள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் கைது

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரையும் ஐஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேரை சனிக்கிழமை (12) அன்று இரவு 11 மணியளவில் கைது செய்துள்ளதுடன் 26 லீற்றர் கோடா மற்றும் பெருமளவிலான ஐஸ் போதைப் பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி பண்டார தெரிவித்தார்

டிரம்பின் வரி விதிப்பு:பாதிப்பு குறித்து ரணில் விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் நாட்டிற்கு ஏற்படும் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை தெரிவித்துள்ளார்.