“சுகாதார சேவை என்பது சமூகத் தேவைப்பாடாகும்”

சுகாதார சேவையானது வெறும் சேவை மாத்திரமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட ஆகியன அந்த சமூகத் தேவைப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

விபத்துகளில் 12,000 பேர் இறக்கின்றனர்

திடீர்  விபத்துகளால் ஆண்டுதோறும் 10,000 முதல் 12,000 பேர் வரை நாட்டில் இறக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு  கூறுகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 145,000 பேர் இறக்கின்றனர் . மொத்த இறப்புகளில் 8% விபத்துகளால் ஏற்படுவதாகவும் இந்த பிரிவு கூறுகிறது.

இனிய பாரதி கைது

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் யுத்தகாலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்ப குமார் கைது செய்யப்பட்டுள்ளர்.

செம்மணியில் இன்று இரண்டு சிறுவர்களின் என்புக் கூடுகள்

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றும் 2 சிறார்களின் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். 

சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

தெவுந்தர குடு சமில் மரணம்

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெவுந்தர குடு சமில்” என்று அழைக்கப்படும் நாராதொட்ட ஹேவகே சமில் அஜித் குமார என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுவரி திணைக்களத்தின் சாதனை

இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம் ரூ120.5 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இது நிதி அமைச்சு நிர்ணயித்த இலக்கை விட 102.6% முன்னேற்றமாகும். இதேபோல், இலங்கை மதுவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டில் 178.6 பில்லியன் ரூபாவையும், 2022 ஆம் ஆண்டு 170.3 பில்லியன் ரூபாவையும் வருவாயாக ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செம்மணி கொலைகள் பற்றி பொய் பேசும் வித்தியாதரன்

(இனமொன்றின் குரல்)

யார் இந்த வித்யாதரன்
யாருடைய சம்பளப் பட்டியலுக்கு வேலை செய்கிறார்…?

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட புலிகள் இயக்கத்திற்கு உதவியர்களே இலக்கு வைக்கப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதாக பத்திரிகையாளர் திரு வித்தியாதரன் சொல்லியிருக்கின்றார்

லஞ்சம் வாங்கிய காதி நீதவான் கைது

விவாகரத்து வழக்கை பெண்ணுக்கு சாதகமாக முடிவெடுக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டபோது, ​​கதுருவெல காதி நீதவான் மற்றும் ஒரு லிகிதர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

வீதியில் கண்டெடுத்த மணி பேர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு

தன்னால் கண்டெடுக்கப்பட்ட மணி பேர்ஸ் ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்முனை மாநகர சபை ஊழியரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.