கோடீஸ்வர தொழிலதிபர் கொலை: மாணவனும் கைது

கட்டுனேரியில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கொலை செய்து, சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்தில் உள்ள கழிவுநீர் தாங்கிக்குள் அவரது உடலை வீசிய குற்றச்சாட்டில்  இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செம்மணியில் அதிகரிக்கும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை

யாழ்ப்பாணம்-செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 47 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. புதைகுழியில் மேற்கொள்ளப்படும் அகழ்வு நடவடிக்கைகளின் ஞாயிற்றுக்கிழமை(06) அன்று இரு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய 38 பேருக்கு அபராதம்

அம்பாறை  மாவட்டத்தில்  கடந்த   ஜூன்   மாதம்  நுகர்வோர்  பாதுகாப்புச்  சட்டத்தை  மீறி  வியாபார  நடவடிக்கைகளில்  ஈடுபட்டு  வந்த  38  வர்த்தகர்களுக்கு  நீதிமன்றங்களால்  01  லட்சத்து 77  ஆயிரத்து  500 ரூபாய்  அபராதம்  விதிக்கப்பட்டுள்ளதாக  பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின்  அம்பாறை  மாவட்ட  பொறுப்பதிகாரி  எஸ்.என்.எம். சாலிய  பண்டார  நவரத்ன  இன்று (07) தெரிவித்தார்.

வைத்தியர் மகேஷியின் மகளுக்கு விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை மிரட்டிய  குற்றச்சாட்டில், வைத்தியர்  மகேஷி சூரசிங்க விஜேரத்னவின் 21 வயது மகள், கெசெல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

”தென்னகோன் பொறுப்பேற்றவுடன் குற்றச் செயல்கள் மறைந்துவிட்டன”

பதில் ஐஜிபி தேசபந்து தென்னகோன் பொறுப்பேற்றவுடன் நாட்டில் நிலவிய குற்றச் செயல்கள் மறைந்துவிட்டன என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்

அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சிகள் பெரும் சக்தியாக உள்ளன. இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, மாறி மாறி வெற்றியும் பெற்று வருகின்றனர்.

வங்கிக்குச் சென்ற காட்டு யானை

காட்டு யானை ஒன்று, வெள்ளிக்கிழமை (05) அதிகாலை மதவாச்சி மக்கள் வங்கிக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதவாச்சி நகருக்கு வந்த யானை, மன்னார் சாலையில் மதவாச்சி பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள மக்கள் வங்கிக்குள் புகுந்து, வங்கியின் பிரதான கண்ணாடி கதவை உடைத்து, வங்கி வளாகத்திற்குள் நுழைந்து அதன் கூரையை சேதப்படுத்தியுள்ளது.

பெண்ணிடம் ரூ.5,000 பெற்ற பி.சி கைது

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து ரூ. 5,000 பணம் பெற்றதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

படலைக்கு பூட்டு: தவிக்கின்றது அமைச்சர் குழு

அனுராதபும் நுவரவாவிக்கான சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு, வேகந்த வழியாக வெளியேறுவதற்கு வந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, வேகந்தவுக்குள் வைத்து, அதன் படலைக்கு பூட்டுபோட்டமையால், அந்த குழு பெரும் சிரமங்களுக்கு முகங்கொடத்து  சிக்கித் தவித்தனர்.

வடக்கு ரயில் பயணிகளின் கவனத்துக்கு

பயணிகளின் ஏராளமான கோரிக்கைகளைத் தொடர்ந்து, வார இறுதி நாட்களில் வடக்குப் பாதையில் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (ஜூலை 7) முதல் தினமும் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே துறை அறிவித்துள்ளது.