யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பாக,மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (02) அன்று பிரதிவாதிகளுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பியது.
Month: July 2025
புலிகளின் துணுக்காய் சித்திரவதைக் கொலைச்சாலை
(சமரன்)
இங்கு 4000 மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களா…..?
ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்
1990 ம் ஆண்டு நடந்த கொடூர சம்பவங்கள்.
35 வருடங்கள் கடந்து விட்டது.
எனது 35 ஆவது வயதில் எனக்கு கிடைத்த கொடிய, துயர அனுபவம். பலதை மறந்து விட்டேன். எனினும் அடிக்கடி அது சம்பந்தமான கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும்.
பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறார்கள்
சிறுவர் என்பது பெற்றோரின் அதிகபட்ச அன்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பைப் பெறத் தகுதியானவர் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பைப் பெற உரிமையுள்ளவர். தற்போது, பல சிறுவர்கள், தங்களின் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குத் தேவையான அன்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பையும், தேவையான வசதிகளையும் பெறுவதில்லை.
ஓட்டோ கட்டணங்கள் குறித்து அறிவிப்பு
“வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது”
ஒரு லிட்டர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரித்தாலும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வேன் கட்டணம் அதிகரித்தால், மாணவர்களின் எண்ணிக்கை குறையும் எனவும் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்த முடியாத பெற்றோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா இடைநீக்கம்
தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி 36 செனட்டர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் பரிசீலித்து வரும் நிலையில் இந்த இடைநீக்கம் நடைபெற்றுள்ளது.
குறைந்தது பேருந்து கட்டணம்
ஜூலை 4 முதல் அமலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 0.55 சதவீதம் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச கட்டணம் மாறாமல் இருக்கும். எரிபொருள் விலைகள், செயல்பாட்டு செலவுகள் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, வருடாந்திர கட்டணம் சரிசெய்தல் பொறிமுறையின்படி இந்த திருத்தம் செய்யப்பட்டதாக குறித்த ஆணையம் தெரிவித்துள்ளது.
”பெல்ட் அணியுங்கள் அல்லது வேறு வேலை தேடுங்கள்”
அதிகபட்ச பாதுகாப்பிற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் போது சீட் பெல்ட்கள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பேருந்து உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டத்திற்கு இணங்க விரும்பாதவர்கள் வேறொரு தொழிலில் வேலை தேடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நிகழ்வு
’’கடையை சாத்திவிட்டு போக வேண்டியது தான்’’: எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் “வரலாற்றில் எந்த மனிதனையும் விட அதிக மானியங்களைப் பெற்றார்” என்றும், அது இல்லாமல், வரி மசோதா தொடர்பாக இருவருக்கும் இடையிலான பகை அதிகரித்ததால், அவர் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே திரும்ப வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
