” செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
Month: August 2025
முத்தையன்கட்டு சம்பவம் குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் கருத்து
இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்: அமெரிக்கா
பிரதமர் பதவியில் மாற்றமா?
தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஷூஹதாக்கள் நினைவு தினம்

1990ஆம் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது ஷூஹதாக்கள் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (12) ஏறாவூரில் அனுடிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களிலும் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் ஞாபகார்த்தமாகவே ஷூஹதாக்கள் நினைவு தினம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இது தொடர்பான பிரார்த்தனை ஏற்பாடுகள் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் அதன் ஷூஹதாக்கள் ஞாபகார்த்த பேரவைத் ஸ்தாபகத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.
சந்திரிகா அதிரடி அறிவிப்பு
“இளைஞர் இயக்கமே அரசாங்கத்தின் முயற்சி“ – அனுர
கடந்த 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த இளைஞர் மாநாடு, இந்த நாட்டின் இளைஞர்களை அரசியல் கைப்பாவைகளாக மாறாது, நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் தலைவர்களாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைக் குறிக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டினேன் என கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் செவ்வாய்க்கிழமை (12) காலை நடைபெற்ற “யூத் கிளப்” தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
”இலங்கையின் பேரில் எந்த செயற்கைக்கோள் தரவும் இல்லை”
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களின் உலகளாவிய ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) பதிவுகளில் இலங்கை என்ற பெயரில் எந்த செயற்கைக்கோளும் பதிவு செய்யப்படவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (12) தெரிவித்தார்.