பல விடயங்களுக்கு தீர்வு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று புதன்கிழமை (13) அன்று முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம்

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவின் 3 வது வருட பூர்த்தியை ஒட்டி வியாழக்கிழமை (14) அன்று பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம் இடம் பெற்றது. 

தேசிய தாய்ப்பால் மாதம் பிரகடனம்

ஆகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பால் மாதமாக அறிவிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு மாதத்தைக் குறிக்கும் தேசிய கொண்டாட்டம் மற்றும் ஆலோசனைப் பட்டறை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

புத்தளம் வனப்பகுதியில் தீ

புத்தளம், அட்டவில்லாவ வனவிலங்கு சரணாலயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் காற்றாலை துறை தலைவர் நிஷாந்த பண்டார தெரிவித்தார்.

வாவியில் இருந்து 8,188 தோட்டாக்கள் மீட்பு

அனுராதபுரம், கலென் பிந்துனுவெவ கெடலாவ வாவியில் இருந்து  தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.   

ராஜிதவின் சொத்துக்கள் முடக்கம்?

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  கவனம் செலுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாகத் தெரிகிறது.

டொன்பாஸ் பிராந்தியத்தை விட்டுக் கொடுப்பதை மறுக்கும் ஸிலென்ஸ்கி

யுத்தநிறுத்ததுக்குப் பதிலாக டொன்பாஸ் பிராந்தியத்தை விட்டுக் கொடுக்கும் எந்த ரஷ்ய முன்மொழிவையும் உக்ரேன் மறுக்குமென அந்நாட்டு ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறுகிய நேரத்தில் கிழக்கு உக்ரேன் நகரான டொப்ரோபிலியாக்கருகே ரஷ்யப் படைகள் 10 கிலோ மீற்றர் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பயங்கர துப்பாக்கி சண்டை

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் கடந்த மே 10ம் திகதி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு முதல் முதலாக பாகிஸ்தான் தூண்டுதலால் புதன்கிழமை (12) இரவு ஜம்மு காஷ்மீரில் இருநாடுகளின் எல்லையில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் நம் நாட்டின் ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

”ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கத்தின் சொத்துக்கள்”

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கவிழ்ந்துவிடாது என்றும், அதன் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருக்கும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார். பதவிக்காலத்திற்குப் பிறகு, அரசாங்கம் மக்கள் முன் சென்று வாக்கெடுப்பு நடத்தக் கோரும் என்றும் அவர் கூறினார்.