மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு

மியன்மாரில் 4 ஆண்டுகளாக  உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தப்படும் என இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.

செம்மணி செல்லும் மனித உரிமை ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மறுதினம் (04) யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பிரதேசத்தைப் பார்வையிடுவதற்குப் தீர்மானித்துள்ளது.

பேருந்து கவிழ்ந்து விபத்து : 42 பேர் காயம்

கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் இன்று (02) காலை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 42 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ICE போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது

50.410 கிராம் ICE போதைப்பொருளுடன் 37 வயதுடைய வெளிநாட்டவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் செல்லுபடியாகும் விசா இல்லாமல் நாட்டில் வசித்து வருவது மேலும் தெரியவந்தது. பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

செம்மணி பொருட்களை அடையாளங்காண பொதுமக்களுக்கு அழைப்பு

யாழில் மீட்கப்பட்ட மனித என்புக்கூட்டுத் தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

வலிமையான எதிர்கால தலைமுறையே நாட்டிற்கு தேவை- பிரதமர் ஹரினி

இன்றைய சமூகத்திற்கு அத்தியாவசியமான இளம் தலைவிகளை உருவாக்கும் ஆற்றல் இலங்கை பெண் சாரணியர் சங்கத்திற்கு உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்தல்

(தோழர் ஜேம்ஸ்)

இருந்த நாட்டை இல்லாத நாடாக கருதி அங்கீகாரம் வழங்கும் புதினம் இது.

பாலஸ்தீனத்தை சுதந்திர தனிநாடாக அங்கீகரிக்க…கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து. மோல்ரா உட்பட்ட பல நாடுகள் முடிவு செய்துள்ளன என்று செய்திகள் வருகின்றன.

நில வரைபடங்களை நாளை முதல் ஒன்லைனில் அணுகலாம்

நில அளவை வரைபடங்கள் நாளை, ஓகஸ்ட் 01, 2025 முதல் நிகழ்நிலையில் கிடைக்கும் என்று நில அளவையாளர் நாயகம் வை.ஜி. ஞானதிலக இன்று அறிவித்தார். நில அளவைத் திணைக்களத்தின் 225வது ஆண்டு நிறைவு குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை மீதான வரியை 20 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்கா

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  இந்த வரி விதிப்பு 2025 ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது.

ரூ2,000 கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2000 ரூபாவாக உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை (31) அன்று ஹட்டன் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.