டிரம்ப் பேச்சில் திடீர் மாற்றம்: ஒரே வார்த்தையில் மோடி பதில்

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகரீதியாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை டொனால்டு டிரம்ப் திடீரென ‘நண்பன்’ என அழைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

AI யால் அடுத்த 5 வருடத்தில் 99 சதவீதம் பேர் வேலையை இழப்பர்: எச்சரிக்கும் நிபுணர்

செயற்கை நுண்ணறிவு (AI) வந்தது முதல் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் மாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. தொழில்களை தானியங்கியாக்கும் இந்த தொழில்நுட்பம், பல முன்னணி நிறுவனங்களில் வேலை இடங்களைக் குறைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதன் தீவிர விளைவுகள் குறித்து தற்போது அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர் ரோமன் யம்போல்ஸ்கி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா

உக்ரேன் – ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது.

வாகனப் பாதுகாப்பு: நாளை முதல் அதிரடி

சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடைமுறைகளுக்கு எதிராக இலங்கை பொலிஸ் செப்டம்பர் 8 முதல் நாடு தழுவிய கடும் நடவடிக்கையைத் தொடங்கும் என்று பிரதிப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்தார்.

29 ஆம் ஆண்டு நினைவேந்தல்

செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07) அன்று இடம்பெற்றது.

ரணில் எம்.பி ஆவாரா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார்.

மீட்பு பணியில் காயமடைந்த இராணுவ வீரரின் திகில் அனுபவம்

எல்ல-வெல்லவாய வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற   கொடூரமான பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் இருவர் மீது கற்பாறைகள் விழுந்தமையால் அவ்விருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை உங்களுக்குத்தெரியும்.

புற்றுநோய்த் தடுப்பூசி கண்டுபிடிப்பு

ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி இப்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என்று ரஷ்ய கூட்டாட்சி மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் (FMBA) அறிவித்துள்ளது.

ராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்ய முடிவு; ஆளும் கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருப்பவர் ஷிகெரு இஷிபா. இவர், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார்.

தேடப்பட்டு வந்த பியல் மனம்பேரி கைது

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.