மலையக முக்கிய புள்ளி இன்று சிக்குவார்?

மலையகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிற்சங்க மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய பதவியில் இருப்பவர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று (08) ஆஜராகியுள்ளார். கடந்த காலங்களில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முறைக்கேடான கட்டிட அனுமதி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

’’புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதி’’

வெளிநாட்டில் இறக்கும், ஊனமுற்ற மற்றும் வெளிநாடுகளில் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

ஐஸ் தயாரிப்பு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை துறைமுகத்தை விட்டு எவ்வாறு வெளியேற முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி திட்டம்

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்   அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (08) அன்று அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இணைந்து பணியாற்ற விருப்பம்

ஆரம்பக் கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்கு இணங்க, ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

”நாமலின் முகபாவனைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள்”

கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முகபாவனைகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு விவசாயம் மற்றும் கால்நடை துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜென் Z போராட்டத்தால் நேபாளம் ஸ்தம்பித்தம்: 14 பேர் பலி

நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினர். சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ஹரிணி பதவி நீக்கப்படுவாரா? டில்வின் கருத்து

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற ஊகங்களை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்தார். பொதுக் கூட்டத்தில் பேசிய சில்வா, எதிர்க்கட்சி நீண்ட காலமாக ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருவதாகவும், ஆனால் அவை எதுவும் நிறைவேறவில்லை என்றும் கூறினார்.

யாழ்ப்பாணம் பொதுஜன நூலகம்

யாழ்ப்பாணத் தேசிய மக்கள் சக்திப் பொதுமக்கள் தொடர்புக் காரியாலயத்திற் பிரத்தியேகமாக ஒரு பொதுஜன நூலகம் இன்று மாலை 5.00 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

ஒரு தொற்றுநோயாக மாறியுள்ள புற்றுநோய்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக தற்போது அதிகரித்துள்ளது. இந்த நாட்டில்   பெரியவர்கள் அல்லது சிறியவர்கள் என்று பாகுபாடு காட்டாது புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது இரகசியமல்ல.