எல்ல விபத்து : தனது தங்காலை மக்களுக்கு மஹிந்த இரங்கல்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஹரிணி நேரில் அஞ்சலி

எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இறுதி அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தங்காலை நகர சபைக்கு, பிரதமர் ஹரிணி அமரசூரியசென்று இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். 

தேடப்பட்டு வந்த பியல் மனம்பேரி கைது

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.  மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் மரணம்

கொழும்பில் இரு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?

(மொஹமட் பாதுஷா)

இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன? முஸ்லிம்களும்;   மலையக மக்களும் தனித்தனியான தேசிய இனங்கள் இல்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

பென்டகனின் பெயரை மாற்றினார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார்.  அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 

இலங்கை – இத்தாலி இடையே அரசியல் கூட்டம்

இலங்கை – இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி மற்றும் இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.

எல்லையில் பஸ் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது; ஜீப் சாரதி கைது

எல்லையில் பஸ்ஸூடன் ஜீப்பும் 1000 அடி பள்ளத்தில் புரண்டுள்ளது , எல்ல காவல் பிரிவு, எல்ல வெல்லவாய சாலையின் 23வது மற்றும் 24வது கி.மீ தூண்களுக்கு இடையிலான பகுதியில், வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து, எதிரே வந்த ஜீப் ம சாலையின் பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி 1000 அடி பள்ளத்தில் 04.09.2025 அன்று இரவு 9 மணியளவில் கவிழ்ந்தது.

எல்ல விபத்து; மீட்பு பணிகளில் ஹெலிகள்

பேருந்து வளைவில் செல்லும் போது சாரதி பிரேக் பிடிக்குது இல்லை என்றார் நடத்துனரும் மற்றவர்களும் சிரித்தபடி பொய் சொல்கிறார என்றார்கள். அடுத்த வளைவில் செல்லும் போது தான் பொய் சொல்லவில்லை. உண்மையை சொல்கிறேன் என்றார்.