அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தம்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்கியது.

வடக்கின் விதை தேங்காய் உற்பத்தி அலகு திறந்து வைப்பு

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் விதைத் தேங்காய் உற்பத்தி அலகு பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (02) காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த திட்டம் இலங்கை  தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

ஞாயிற்றுகளில் ‘காலை’ தடை

ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை மாத்தறை நகரில் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்,

மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு

இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வடக்கின் விதை தேங்காய் உற்பத்தி அலகு திறந்து வைப்பு

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் விதைத் தேங்காய் உற்பத்தி அலகு பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (02) காலை திறந்து வைக்கப்பட்டது.

நினைவுக்கல்லில், ஜனாதிபதியின் பெயர் இல்லை

குடிவரவு- குடியல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திங்கட்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.   

நினைவுக்கல்லில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயர் பொறிக்கப்படவில்லை. இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பொதுமக்களது நிதியை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

எல்லை தாண்டி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களுக்கான விளக்கமறியல் ஏற்கனவே இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான வழக்கு, இன்று (01) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்களின் விளக்கமறியல் உத்தரவு, நவம்பர் 11 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது,  

யாழில் கடவுச்சீட்டு பிராந்திய அலுவலகம் திறப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திங்கட்கிழமை (01) அன்று திறந்து வைக்கப்பட்டது. 

மயிலிட்டியில் ஜனாதிபதிக்கு திலகமிட்டு வரவேற்பு

மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (01)ஆரம்பித்து வைக்கப்பட்டது