சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறு தவணை இடப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (2) விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Month: September 2025
’’வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்க முடியாது’’
இந்த மாதம் முதல் புதிய மருந்து விலை நிர்ணய சூத்திரம் அமல்படுத்தப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். புதிய விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, யாரும் வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்க முடியாது என்றும் அவர் கூறினார். அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்பனை செய்வது மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.
31 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது
கச்சத்தீவு வரலாறு
கச்சத்தீவு விவகாரம் என்பது இந்தியா மற்றும் இலங்கை இடையேயான புவிசார் அரசியல் உறவுகளில், குறிப்பாக தமிழகத்தின் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் தொடர்ந்து சவால்களை ஏற்படுத்தி வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாகும். இது வரலாற்று உரிமைகள், சர்வதேச இராஜதந்திரம், உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித வாழ்வாதாரம் ஆகியவற்றின் குறுக்குவெட்டுப் புள்ளியில் அமைந்துள்ளது.
வடக்கிற்கான பாதை அபிவிருத்தி
காலத்தே அரசியல் செய்தல்
பல ஆண்டுகளாக துயரத்தில் உழலும் உறவினர்கள்
அரசியல், வன்முறை, போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்துக்கிடக்கும் அவர்களுடைய உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 30ஆம் திதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐ.நா. கடந்த 2011.08.30ஆம் திகதியன்று அறிவித்தது.
’உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்’
இஸ்ரேல் மீது தடை விதிக்கவுள்ள பெல்ஜியம்
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இம்மாதம் பலஸ்தீன அரசை பெல்ஜியம் அங்கிகரிக்கவுள்ளதாகவும், இஸ்ரேலிய அரசாங்கம் மீது உறுதியான தடைகள் விதிக்கப்படுமென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மக்ஸிமெ பிறிவொட் இன்று எக்ஸில் அறிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புகளிலிருந்தான இறக்குமதிப் பொருள்கள் மீதான தடை உள்ளடங்கலான 12 உறுதியான தடைகளை பெல்ஜியம் விதிக்கவுள்ளதாக பிறிவொட் கூறியுள்ளார்.