”மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல்”

மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதன் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க கூறினார்.

ஆலங்குளம் அ.த.க. பாடசாலையின் அபிவிருத்தி…

எமது பாடசாலையில் தரம் 10 வரை யான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அடுத்த வருடம் தரம் 11 ஆரம்பமாகும் உள்ளது.

வடகிழக்கு மாகாணசபையும் வரதராஜப்பெருமாளும்.!

1987,யூலை,29,ல் இந்திய இலங்கை உடன்பாட்டை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு அறிவித்தது.

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கலைந்து செல்லுமாறு பொலிஸ் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.  புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தீபாவளிக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது முன்னாள் காதலரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலம் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

இஷாரா உள்ளிட்டவர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நேபாளத்தில் கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேரையும் மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஷாரா உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிலும், மற்றைய இருவரும் பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் மேற்கு குற்றத் தடுப்புப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேருந்தில் ஹரோயின் மற்றும் ஐஸ் கடத்திய சாரதி

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து ஹரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த பேருந்தின் சாரதியும் அவருடன் பயணித்த மற்றொரு நபரும் அம்பாறை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகநபர்கள் கைதானதுடன் பேருந்தும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கைதான இரண்டு சந்தேகநபர்களும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

தோமஸ் சங்காரா

பிரான்சின் காலனியாதிக்க குடியேற்ற நாடாக இருந்த மேற்கு ஆபிரிக்க நாடான Upper Valto வின் தலைவராக 1984 இல் ஆட்சியைக் கைப்பற்றிய தோமஸ் சங்காரா விடம் ஏனைய ஆபிரிக்க நாடுகளைப் போல ஜனாதிபதியின் படங்களை எல்லா இடங்களிலும் ஏன் காட்சிப் படுத்த வில்லை எனக்கேட்ட போது, “ஏழு மில்லியன் தாமஸ் சங்காராக்கள் எம் நாட்டில் இருக்கிறார்கள்” என்றார்.