காசா அமைதி திட்டம்: இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல்:டிரம்ப் அறிவிப்பு

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு வருடமாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போது நிகழாத நிகழ்வாகும் எனவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனாவின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும்

(முருகானந்தன் தவம்)

‘‘கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’’ என்பார்கள். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தின்  வழியாகத் தமிழ் அரசியல்வாதியாக வடக்கிலிருந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தனது  கொள்கையில்லாத, தில்லாலங்கடி அரசியல் மூலமும் தனது சமூக ஊடகம் மூலமும் இன்று இலங்கையில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களினால் நன்கறியப்பட்டவராக , விமர்சனங்களுக்குட்பட்டவராக உருவெடுத்துள்ளார்.

’’இரண்டாவது மனைவி வகித்த பதவியை வெளியிட வேண்டும்’’

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவின் மனைவி ஒரு காலத்தில் மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன மகேந்திரனிடம் பணிபுரிந்ததாக எதிர்க்கட்சி நேற்று மற்றொரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.

டெட்டோ ஐஸூடன் மல்லி கைது

இளைஞர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த டெட்டோ மல்லி என்ற இளைஞனை நீண்ட காலமாக தேடி வந்த நிலையில் அவர் புதன்கிழமை(8) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் கைது

“களுதர போம்புவல புஸ் கோட்டா” என்று அழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் தலைமையிலான மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை பொலிஸில் விமல் ஆஜர்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். பொலிஸாரால் விடுக்கப்பட்ட முறையான அழைப்பாணையைத் தொடர்ந்து தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவர் ஆஜராகினார். அவர் தற்போது தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“2026 இல் மாகாண சபைத் தேர்தல்”

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த்   பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) தெரிவித்தார். தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு செய்ய விவாதங்கள் நடத்தப்படலாம் என்று அவர் கூறினார். “விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுமா அல்லது கலப்பு முறையின் கீழ் நடத்தப்படுமா என்பதை நாங்கள் முடிவு செய்யலாம்” என்று அவர் கூறினார்.

கொழும்பு துறைமுகம் 2025 ஆம் ஆண்டில் ரூ. 32.2 பில்லியன் இலாபம்

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ. 18.9 பில்லியனை விட 71% அதிகமாகும் என்று இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) அறிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் தகவல்களை வெளியிடக்கூடாது – நீதி அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது  என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில், வியாழக்கிழமை (09) தெரிவித்தார். இந்தத் தகவல்களை வெளியிட பாராளுமன்றம் கூட உத்தரவிடக்கூடாது என்று அவர்   கூறினார்.

ஐ.நாவில் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு:கால அவகாசம் கேட்ட அரசாங்கம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இரண்டுவார கால அவகாசம் கோரினார்.