2026இல் வட மாகாணத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

போராட்டம், 22 ஆவது நாளாகவும் நீடிப்பு…

திருகோணமலை, முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டம்  22 ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக புதன்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது.

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு : யாழில் ஆர்ப்பாட்டம்

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக  அரியாலை கிழக்கு பகுதியில் புதன்கிழமை (08) அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

3,250 தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

3,250 தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புலிகளின் ஆதரவாளர்களை மகிழ்விக்கப் போகிறீர்களா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பைக் கோரவில்லை. வாக்கெடுப்பைக் கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. எனினும், டயஸ்போராக்களையா? விடுதலைப் புலி ஆதரவாளர்களையா? மகிழ்விக்கப் போகின்றீர்கள் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்​வியெழுப்பினார்.

நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள்  ணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.

வாடிக்கையாளரை ஏமாற்றுவதில் விற்பனையாளர் புத்திசாலி

இந்த நாட்டில் 1970களில்  பாடசாலைகளில் குழந்தைகளைச் சேர்க்கும் போது, நன்கொடை இல்லை. அந்த நேரத்தில், புத்தாண்டு அல்லது புதிய பாடசாலை பருவத்தின் தொடக்கத்தில் ஆசிரியர்கள் குழந்தைகளிடமிருந்து பரிசுகளை வாங்குவதில்லை.

பொலிஸாருக்கு எதிராக யாழ். வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்

நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் ஒரு வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பழைய மின்சார சபை வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்  ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய  நபர் ஒருவர் திங்கட்கிழமை(6) மாலை   கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதிவாசி அகராதி வெளியீடு

ஊவா மாகாண சபையின் ஏற்பாட்டில், ஊவா நவோதயா கலாசார கலை விழாவுடன் இணைந்து ஆதிவாசி அகராதி வெளியீட்டு விழா பதுளை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல, உருவரிகே வன்னில அத்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.