முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிப்போம்: சீன தூதுக் குழு உறுதி

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் உறுப்பினரும், பொருளாதார விவகார குழுவின் பணிப்பாளருமான கௌரவ வாங் குவோஷெங்   தலைமையிலான உயர்மட்ட சீனத் தூதுக் குழுவினர் இலங்கை பாராளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (06) கலந்துரையாடலொன்றை நடத்தினர்.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் கைது

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் வியாழக்கிழமை (06)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவன், மகன் சிக்கினர்: மனைவி இராஜினாமா

தனது கணவர் மற்றும் மகன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தேசிய மக்கள் சக்தியின்  பேலியகொட நகர சபை உறுப்பினரா  நிரஞ்சல குமாரி ராஜினாமா செய்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

வித்யா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவலோகநாதன் வித்யா கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (06) ஒத்திவைத்துள்ளது.

கொலன்ன பிரதேச சபை: பட்ஜெட்டில் தேசிய மக்கள் சக்தி தோல்வி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, வரவு-செலவுத்திட்டத்தில் (பட்ஜெட்) முதல் தோல்வியை சந்தித்துள்ளது. கொலன்ன பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டில், ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

நியூயோர்க் மேயர் தேர்தலில் மம்தானி வெற்றி

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எரிக் ஆடம்ஸ் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானியும் (வயது 34), குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவும் முன்னிலை வகித்து வந்தனர்.

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் மீது சூறாவளி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களை வீடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை வசம் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் குறித்து அரசாங்கத்தின் பதில் என்ன?

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.