விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தால் தற்போது முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இது மிகவும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற ஒரு குழுவால் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் சரத்சந்திர குணரத்ன ஜயதிலக கைது செய்யப்பட்டுள்ளார்.

இறுதி வெற்றி பெண்களுக்கான அங்கீகாரத்தை கூட்டத்தான் போகின்றது

(தோழர் ஜேம்ஸ்)


அரை இறுதி ஆட்டத்தில், 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியாவின் மகளிர் அணியை இந்திய மகளிர் அணி சில தினங்களுக்கு முன்பு வென்றது.

வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 35 ஆவது ஆண்டு நினைவுகூறல் யாழ்ப்பாணம் முஸ்லிம்களால் முன்னெடுப்பு

1990 களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் மீதான பலவந்த இனச்சுத்திகரிப்பின் 35ஆவது வருட நினைவுகூறலும் ஊடகவியலாளர் மாநாடும் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் “எங்கள் நிலம், எங்கள் வாழ்வாதாரம் – எங்கள் அடிப்படை உரிமைகள்”எனும் தொனிப்பொருளில் இன்று 2025.10.30 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் கோரிக்கை

1990ஆம் ஆண்டு ஒக்டோபரில், வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்களின் கூட்டு ஓவியக் கண்காட்சியும், புத்தளத்தில் நினைவுக் கூட்டமும் நேற்று (31) நடைபெற்றது.

மொழி அப்படின்னா என்ன?

மொழி அப்படின்னா என்ன? அது வெறும் தகவல் தொடர்பு கருவி மட்டுந்தானா? அத தாண்டி ஒரு மொழியோட சிறப்பு என்னவா இருக்க முடியும்? இந்தக்கேள்வி பலமுறை எனக்குள்ள எழுந்திருக்கு. அதுக்கான பதில் ரொம்ப தெளிவா நேத்து எனக்கு கிடைச்சது.

கெஹெல்பததர பத்மேவுடன் சுற்றிய 5 நடிகைகள்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அத்திணைக்களம் இன்று (31) நீதிமன்றத்தில் அறிவித்தது.

அமெரிக்காவில் 33 ஆண்டுக்கு பிறகு அணு ஆயுத சோதனை

அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 1945 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி அமெரிக்காவில் முதல் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அந்த நாடு இதுவரை 1,054 அணு ஆயுத சோதனைகளை நடத்தி உள்ளது. கடைசியாக கடந்த 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி அமெரிக்காவின் நெவாடா அணு சக்தி சோதனை நடத்தியதில் பூமிக்கடியில் 2,300 அடி ஆழத்தில் சோதனை நடத்தப்பட்டது.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

தொழிலாளர்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து வியாழக்கிழமை (30) அன்று ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.