கிளிநொச்சி அரச அதிபரின் மிக மிக அவசரமான செய்தி, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இரணைமடுவின் வான் பகுதிகள் breaching section வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து மிக மிக அதிகமாக இருப்பதன் காரணமாக தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது இருப்பினும் இன்னும் நீர் அதிகமாக குளத்துக்கு வந்து கொண்டிருப்பதனால் குளத்தின் வான் பகுதியை வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
Month: November 2025
வெள்ளத்தில் மூழ்கிய குட்டி இங்கிலாந்து
முக்கிய தொலைபேசி எண்கள்
அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான இலக்கங்கள்
அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் அவசர அனர்த்த மேலாண்மை மையம் (DMC): 117 (அவசர அனர்த்த தகவல் வழங்கல் மற்றும் நிவாரண சேவைகளின் ஒருங்கிணைப்பு) பொலிஸ் அவசர அழைப்பு: 119 (உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்) சுவ வசரிய ஆம்புலன்ஸ் சேவை: 1990 (நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக) தீயணைப்பு படை: 110 (தீ விபத்துகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க) தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946 (நிலச்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கைக்காக) வானிலை ஆய்வு துறை: 011 268 6686 (வானிலை முன்னறிவிப்புகளை அறிய) கடற்படை தலைமையகம்: 011 244 5368 (வெள்ள அனர்த்த நேரங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்) இராணுவ தலைமையகம்: 113 (அவசர அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்) விமானப்படை தலைமையகம்: 116 (ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளுக்காக)
மழை அனர்த்தச் செய்திகள்
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்தளை கம்மதுவ பிரதேசத்தில் அதிகமாக 540.6 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது எல்கடுவ, மாத்தளை 442.8 மி.மீ, கொத்மலை, நுவரெலியா 421 மி.மீ, கந்தேநுவர, மாத்தளை 419.2 மி.மீ, தொதொலொயா தோட்டம், கேகாலை 410.2 மி.மீ, நில்லம்பே, கண்டி, 404.8, மி.மீ. மாத்தளை 399.4 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு
உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு. சீரற்ற காலநிலையால் பாடசாலைகளை மீளத்திறப்பது டிசம்பர் 16 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு
இந்தியா அவசர உதவி
தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் விமானம் தரையிறங்கும் கப்பல் INS Vikrant-இல் இருந்து ஹெலிகாப்டர்களை உதவிக்காக அனுப்ப இந்தியா இணங்கியுள்ளது இந்த ஹெலிகாப்டர்கள் இலங்கையில் தொடர்ந்துவரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும்.
பதுளையில் 16 பேர் மரணம்: 10 பேர் மாயம்
இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகள்
இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகள் தற்போது இயற்கை அனர்த்த மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலதிகமாக கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த 26 ஆம் திகதி வந்துள்ள இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் நிறுத்தப்பட்டுள்ள உலங்குவானூர்திகளை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு இந்திய இந்திய தூதரகத்திற்கு முறையான கோரிக்கையை விடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா தெரிவித்தார். இந்நிலையில் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்திலிருந்து உலங்குவானூர்தியை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

