படையினரும் மக்களும் இணைந்து மீட்டெடுத்தனர்
புல்மோட்டை பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 70 பயணிகளை ஏற்றுக் கொண்டு கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேரூந்து நேற்று பகல் கலா ஓயா பாலத்துக்கு அருகே வெள்ளத்தில் சிக்கியது.
The Formula
இன்று கனகராயன் குளத்தின் குளக்கட்டின் நடுப்பகுதியில் உம்மை ஒன்று உருவாகி சடுதியாக நீர் வெளியேறத் தொடங்கியது. குளம் உடைப்பெடுக்கும் ஆபாய கட்டத்தை நெருங்கியிருந்ததை இன்று (29/11/2025) காலை ஆறு மணி அளவில் நீரப்பசன திணைக்ககள ஊழியரான திரு பிரவீன் இனங்காண்டு அடுத்து தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் உடண்டியாக அவசர உதவிக்கு ஊரவரை அழைத்துவரும்படி என்னிடம் கூறியதையடுத்து நான் நேரடியாக வீடு வீடாகச் சென்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தேன்.
கம்பளை நுவரெலியாவிற்கு இடைப்பட்ட பகுதிகளான புஸ்ஸல்லாவ தவலன்தன்ன, கொத்மலை, இரம்பொடை பகுதிகள் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்,அரச ஊழியர்களும் பிரதேச சபை உருபினர்களும் எங்குமே சென்று செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தவலன்தன்ன,கொத்மலை பிரதேசத்தில் மண்சரிவில் பலர் சிக்குண்டுள்ளனர. .கம்பளை நுவரெலியா இடைப்பட்ட பகுதி கொத்மலை கிழக்கு இரம்பொடைகம பகுதியில் 15வீடுகள் முற்றிலுமாக ஆற்றுப் பகுதிக்கு தாழ் இருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதினொரு மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்படுவதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பன்னால, மகந்துர, வெல்கம் வில்லேஜ் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.