பொலிஸாரின் விடுமுறை இரத்து

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் நவம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்

மோசமான வானிலை : 56 பேர் பலி – 21 பேர் மாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 பேர் மரணித்துள்ளனர். அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் அதி செகுசு வாழ்க்கைக்கு SAPPHIRE RESIDENCES

இலங்கையின் அதி சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குறிப்பிடத்தக்கதாக உருவாகியுள்ள Sapphire Residences அண்மையில் ஊடகங்களுக்கு சிறப்பு ஊடக பார்வை சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அனர்த்தம்

அனர்த்த நேரத்தில் மக்களோடு இருக்க சொன்னால், ஒருத்தன் தருணம் பார்த்து நூடில்ஸ் காசு கேக்குறான், இன்னொருத்தன் நாட்டையே கேக்குறான்.

முழு நாடும் பேரனர்த்தம்

இப்படி ஒரு பேரவலத்தை இதற்கு முன் கண்டதில்லை. முழு நாடும் பேரனர்த்தத்திற்கு உட்பட்டுள்ளது.
முழு நாட்டுக்கும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) திரும்பத் திரும்ப விடுக்கப்படுகிறது.
இயற்கையின் சீற்றம் கட்டுமீறிவிட்டது.
திரும்பும் திசையெல்லாம் அழிவுகள்- அபயக் குரல்கள்.

ரம்பொட சுரங்கப்பாதையில் மண்சரிவு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நுவரெலியா-கம்பளை சாலையில் ரம்பொட சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் வியாழக்கிழமை (27) நிலச்சரிவு ஏற்பட்டது.

தேசிய பூங்காக்கள் தற்காலிகமாக மூடல்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இலங்கை முழுவதும் உள்ள பல தேசிய பூங்காக்களை தற்காலிகமாக மூடுவதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை (DWC) அறிவித்துள்ளது.

கனமழையால் 600,000 ஏக்கர் நாசம்: விலை அதிகரிக்கும் அபாயம்

இலங்கை முழுவதும் பெய்த கனமழையால் சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள் நாசமாகியுள்ளன, இதனால் பண்டிகைக் காலத்தில் காய்கறி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னக்கோன் எச்சரித்தார்.

கண்டிக்கு அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனம்

கண்டி மாவட்டத்தில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக அவசரகால பேரிடர் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் வியாழக்கிழமை(27) இன்று தெரிவித்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் பல பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண் சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.

மழை அனர்த்தம்: புகையிரத சேவைகள் இரத்து

வெள்ள நிலைமை காரணமாக, வடக்குப் பாதையில் ரயில் சேவைகள் கொழும்பு கோட்டைக்கும் கலாவெவவிற்கும் இடையில் மட்டுப்படுத்தப்படும். மலையகப் பாதையில் ரயில் சேவைகள் ஹட்டன் வரை மட்டுப்படுத்தப்படும் ​என  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.