330 முன்னாள் எம்.பிக்கள் 182 துணைவிகளின் ஓய்வூதியம் இரத்து

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்து செய்தல்) சட்டமூலம் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவிகளின் நீண்டகால ஓய்வூதிய உரிமைகளை ரத்து செய்வதற்கு வழி வகுக்கும்.

கியூபாவுக்கு எச்சரிக்கை..?

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை கைது செய்த பிறகு முக்கியமான செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,  கியூபாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

வீட்டிற்குள் புகுந்த நபர், மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்

தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் யாளினி ராஜேந்திரனின் கிரகரி வீதியில் உள்ள வீட்டிற்கு சனிக்கிழமை (03) பிற்பகல் 2.30 மணியளவில் வந்த ஒருவர், யாளினி ராஜேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்கி   காயப்படுத்தியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபான சாலைகள் வேண்டாம் :மக்கள் ஆர்ப்பாட்டம்

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட வெஞ்சர் பகுதியில் கடந்த காலத்தில் பியர் மட்டும் விற்பனை செய்து வந்த விற்பனை சாலைக்கு மேலும் மதுபானம் மற்றும் கள்ளு போன்ற குடி வகைகள் விற்பனை செய்ய கலால் திணைக்களம் அங்கீகாரம் வழங்க முயற்சி செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

115 வாட்டர் ஜெல்லுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன்,   சட்டவிரோதமாக மீன்பிடிக்க பயன்படுத்தப்படும், வாட்டர் ஜெல் எனப்படும் நூற்று பதினைந்து வணிக வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

’’போடி’’ என்ற பெண் ஐஸூடன் சிக்கினார்

கொழும்புப் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “போடி” என்ற பெண், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து 820 கிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (04)  உத்தரவிட்டுள்ளது.

நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்

அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை  அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன்  வோஷிங்டன் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக   ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி),  கண்டிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வங்கதேசம் இந்தியாவில் விளையாடாது

வங்கதேசத்தில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் அணியால் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதை அடுத்து, வங்கதேசம் தனது 20-20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவில் விளையாடாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது