நீட் தேர்வு

(Senthil Kumar)
கட்டாயம் ஆன போது அதை ஆதரித்து பதிவுகள் எழுதியவர்களில் நானும் ஒருவன்.
நீட் தேர்வு சாதகங்கள்-
அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு இரண்டிற்கும் சேர்த்து ஒரே தேர்வு. எனவே நீட் சிறந்தது!
நாமக்கல் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகள் 11 ம் வகுப்பை நடத்தாமல் 12 ஆம் வகுப்புகளை நடத்தி அதன் மூலம் ரிசல்ட் தந்தனர். அதனால் லட்சக்கணக்கில் அங்கு பணம் கட்டி மாணவர்களை சேர்த்தனர்.
பண வாய்ப்பு இல்லாதவர்கள் போட்டி போட இயலா சூழல். எனவே நீட் சிறந்தது!
ரிபீட் எழுதலாம். அது தான் கேரியர் என்பவர்கள் தொடர்ந்து எழுதலாம். ஆகவே நீட் சிறந்தது!
தனியார் கல்லூரிகள் டொனேசன் வாங்கினர். இனி முடியாது- நீட் சிறந்தது!

Leave a Reply