வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) அன்று இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சூழலின் கசப்பான யதார்த்தத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
