மாதவிடாய்

(தாரைப்பிதா)

சமீபத்தில் Star (ஸ்டார்) என்ற மலையாள திரைப்படம் பார்த்தேன். குறிப்பிட்ட வயதில் மாதவிடாய் (மெனோபாஸ்) முற்றுப்பெறும் ஒரு பெண்ணுக்கு அந்த கட்டத்தில் ஏற்படும் மனக்குழப்பங்கள் அவரது வீட்டாரால் எப்படி தவறாக பார்க்கப்படுகிறது என்பதே படத்தின் மையக்கரு.

பட்டை இறைப்பு…! பழமையே நமது முதுசம்…!!

(ஆசி கந்தராஜாவின் டயறிக் குறிப்பு)

யாழ்ப்பாணத்தில், 1960ம் ஆண்டுகள் வரை தோட்டத்தில் பட்டை இறைப்பு.

பல தோட்டங்களுக்கு நடுவில், ஒரு பொதுவான கிணறு இருக்கும். பட்டை இறைப்புக்கு நேரமெடுக்குமாதலால் இரவுபகலாக முறைவைத்து இறைப்பார்கள். விவசாயியான எனது பெரிஐயாவின் தண்ணி இறைப்புக்கு துலா மிரிப்பது கட்டையர். ஆழக் கிணறென்றால் இரண்டு பேர் துலா மிரிப்பதுமுண்டு. துலாமிரிப்பது இலேசுப்பட்டதில்லை. ஒரே சீராக மேலும் கீழும் ஏறி இறங்குமாறு, முன்னும் பின்னுமாகத் துலாவில் நடந்து வரவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. இரவு இறைப்பின்போது அலுப்பிலும், நித்திரையிலும் துலாவால் தவறி விழுந்து முடமானவர்களும் இறந்தவர்களும் பலர். ஆனால் கட்டையர் துலாமிரிப்பில் விண்ணன் என்று பெயரெடுத்தவர். அவர் நன்கு பாடுவார். சதிலீலாவதி படப் பாடல் தொடக்கம், காத்தவராயன் கூத்துப் பாடல்வரை ராகம் தாளம் தப்பாமல் பாடுவதில் அவரை யாரும் வெல்ல ஏலாது. இரவு நேர இறைப்பில் துலா மிதிக்கும்போது நித்திரையிலே கீழே விழுந்துவிடாமல் இருக்க, கட்டையர் காத்தவராயன் கூத்துப் பாடல்களை குரலெடுத்துப்பாடுவார். அவரின் பாட்டு, இறைக்கும் மூவரையும் விழிப்பாக வைத்துக் கொள்ளும்.

அக்காவுக்கு ஏழைத் தாய்வீட்டு பொங்கல் வரிசை…

ஒருகட்டு கருப்பங்கழி

காய்வெட்டா வாங்கிவந்த

பூவன்பழம் நாலுசீப்பு

கூடவே

ரெண்டண்ணம்

இஞ்சிக்கொத்து மஞ்சக்கொத்து

கடன்சொல்லி வாங்கிவந்த

பூணம் பொடவை ஒண்ணும்

பூப்போட்ட கைலி ஒண்ணும்

வரிசைப்பணம் அம்பதும்

வடக உருண்டை பொட்டலமும்

என

அம்மா அனுப்பிவைப்பாள்

அக்காவுக்கு

பொங்கல் சீர்

உந்திப் பெடல்மிதித்து

சந்தோஷமாய்

சைக்கிளேறிப்போகும்

என்னை

தெருமுனையில் திரும்பும்வரை

கையசைத்து

பின்மறைவாள்

ஆறுமைலுக்கு

அப்பாலிருக்கும்

அக்காவீடு போவதற்குள்

தெப்பலாய் நனைந்திருப்பேன்

தேகமெல்லாம்

வியர்த்திருப்பேன்

தெருமுக்கு கடைநிறுத்தி

தின்பண்டம் கொஞ்சம்

மயிலாத்தாவிடம்

பேரம்பேசி

மல்லிப்பூ ரெண்டுமுழம்

என

என்பங்குக்கு கொஞ்சம்

சீர்வரிசைப்பைக்குள்ளே

சேர்த்தே

எடுத்துப்போவேன்

” வாடா” தம்பியென

வாஞ்சையோடு அழைக்கும்

அக்காவின் வீட்டுக்குள்

வெரால்மீனு கொழம்பும்

மசால்வடையும்

மணக்கும்

எப்படியும் வருவான்

தம்பியென

கெவுளிச்சத்தத்தை வைத்தே

கணித்துசெய்திருப்பாள்

அக்கா

பனைவிசிறி தந்துவிட்டு

மோரெடுத்துவர

உள்ளறைநோக்கி ஓடும்

அக்காவுக்கு

பிறந்தவீட்டு சீரைக் கண்டு

பெருமை

பிடிபடாது.

பாக்கு இடிக்கும்

மாமியாக்காரி

பார்க்கட்டும் என்பதற்காகவே

தெருத்திண்ணையிலேயே

பரத்திவைப்பாள்

பிறந்த வீட்டு

சீதனத்தை.

“இந்த

இத்துப்போன வாழைக்காயத்

தூக்கிட்டுத்தான்

இம்புட்டுத்தூரம்

வந்தானாக்கும்”

என்னும்

நக்கலுக்கு வெகுண்டு

நாசிவிடைக்க

கிளம்புகையில்

பதறிஓடிவந்து

பாதையை மறிப்பாள்

அக்கா.

வரிசைப்பணத்தைக்

கையில்திணித்துவிட்டு

“வர்றேன்க்கா” என்ற

ஒற்றைச்சொல்லுக்கு

ஓலமிட்டு

அழுவாள்

அழுகை அடக்கி

சிரிக்கமுயன்று

கண்ணீர்மறைத்து

கவலை விழுங்கும் அக்காவை

இன்றுநேற்றா

பார்க்கிறேன்

வரிசை குறித்த

வாக்குவாதங்கள்

வருடந்தோறும்

அரங்கேறியபடிதான் இருக்கும்

அக்காவின்

புகுந்தவீட்டில்

சைக்கிள்தள்ளி

விருட்டென ஏறிமிதிக்கையில்

“வெறும்பயக் குடும்பத்துக்கு

வீறாப்புக்கு கொறச்சலில்லே”

என்னும்

குத்தல் வாசகம் கேட்டு

உச்சிவெயில்கணக்காய்

உள்ளம்

கொதிக்கும்

வெரால்மீனுகொழம்பும்

மசால்வடைவாசமும்

தெருமுனைவரை

என்னை

துரத்திவந்து

பின்மறையும்

உச்சிவெயிலில்

ஆவேசங்கொப்பளிக்க

பசித்தவயிறோடு

திரும்பும் நான்

எப்படிக் கேட்கமுடியும்

அக்காவிடம்

அம்மா கேட்டனுப்பிய

சாயம்போன இரவிக்கை

இரண்டும்

கட்டிப் பழசான

சேலை ஒன்றும் ?

(Rajinikanthan Kanthan)

மகாவா மறைந்தது; சோகத்தில் கம்போடியா

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ‘மகாவா “ என அழைக்கப்படும் எலியானது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலின சமத்துவத்தைப் பேசுகிறதா கேரள மாணவர்களின் சீருடை திட்டம்?- கல்வியாளர்கள் சொல்வது என்ன?

மாணவ, மாணவியரிடம் பாலியல் சமத்துவத்தை உணர்த்தும் வகையில் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரே மாதிரியான பேண்ட், சர்ட் சீருடை அணியும் திட்டத்தைக் கேரள அரசு கொண்டுவந்துள்ளது.

அச்சம் என்பது மடமை என்று உணர்த்திய பறவை!

ஒவ்வொரு உயிரினமும் இவ்வுலகில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள தகவமைப்பைக் கொண்டிருப்பது இயற்கைதான். அதன் மூலம் உணவு தேடிக்கொள்ளவும் பிறிதொன்றுக்கு இரையாகாமல் காப்பாற்றிக்கொள்ளவும் முயல்கிறது. தகவமைப்புகளே அவ்வுயிரினம் உலகில் நிலைபெற்றிருக்கக் காரணமாக இருக்கின்றன. பறவைகளை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில் அப்படிச் சிறப்பான தகவமைப்பைப் பெற்ற இரண்டு வலசைப் பறவைகளைச் சாதாரண உள்ளூர் காகம் லாகவமாக எதிர்கொண்ட ஒரு நிகழ்வு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.

ஓமைக்ரான்

வைரஸ்களின் பரிணாம சுழற்சியில் உருமாற்றங்கள் உருவாவது இயற்கையானது. எனவே புதிதாக உருவாகியுள்ள இந்த ஓமைக்ரான் உருமாற்றத்திற்கு பீதி தேவையில்லை. அதில் பல மனித இனத்திற்கு பாதகமின்றியும் சாதகமாகவும் சில நமக்கு பாதகமுண்டாகும் வகையில் இருக்கும். இதுவும் இயற்கையானது.

உணவு விழிப்புணர்வு: மைதாவும் நாமும்

(Dr.A.B.ஃபரூக் அப்துல்லா)

இந்த மைதா மாவின் ஆரம்பம் தான் என்ன??

இரண்டாம் உலகப் போர் காலத்தில், ஐரோப்பாவில் ஏற்பட்ட பஞ்சத்தை சமாளிக்கவும், ராணுவ வீரர்களுக்கு உணவளிக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது தான் மைதா மாவு.

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

(Mr.Kandasamy)


கிழக்கிலங்கை கோளாவில் கிரமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தொடர்ந்தும் தீவிரமாக எழுதிவரும் முக்கியமான எழுத்தாளராக அவதானித்து வருகின்றேன். எட்டு நாவல்களையும் ஆறு சிறுகதைத் தொகுதிகளையும். மருத்துவத் துறை சார்ந்த இரண்டு மருத்துவ நூல்களையும், முருகன் வழிபாடு பற்றிய மானிடவியல் ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர்.

75 ரூபாய்

வேளாங்கண்ணி அருகே எனக்கு ஒரு இஸ்லாமிய நண்பர் இருக்கிறார்.

நண்பர் என்றால் பள்ளி நட்போ கல்லூரி நட்போ இல்லை ஜூஸ் கடை நட்பு. ஆம் அவர் ஜூஸ் கடை வைத்திருக்கிறார்.

வேளாங்கண்ணி தாண்டும் போதெல்லாம் என் வண்டி அனிச்சையாக அந்த ஜூஸ் கடையில் நின்று விடும்.