கடனுக்கு அரிசி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச பகுதிக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணியை இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக 1200 க்கு ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை ரீண்ட கால குத்தகைக்கு வழங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கிழக்கு மாகாண நில மீட்புக்கான வலையமைப்பின் செயற்பாட்டாளர் சஹீலா சபருள்ளா தெரிவித்துள்ளார்.

“ரயில் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம்”

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில், ரயில் கட்டணங்களை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டாம் என இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மளமளவென உயர்ந்த மணல் விலை

நாட்டில் அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமானப் பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்ந்துள்ளன. இதனால் நாட்டின் கட்டுமானத் துறை கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

பொலிஸாரின் ஒன்பது கட்டளைகள்

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள் குறித்து தெளிவுபடுத்தவும், அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் இலங்கை பொலிஸ் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

2026 உ/த பரீட்சை : ஏப்ரல் 24 வரை விண்ணப்பிக்க அவகாசம்

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் செவ்வாய்க்கிழமை (24) முதல் ஏப்ரல் 24, வரை இணையதளம் ஊடாக மாத்திரமே தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

மாணவிகளுக்கு மட்டும் வவுச்சர்

பாடசாலை மாணவிகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாழ்ங்கிணறு படுகொலை: 96 மணிநேர விசாரணை

மட்டக்களப்பை அதிரவைத்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (23) மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, பிரதான சந்தேகநபர்களை நான்கு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கியதுடன், கொள்ளையிடப்பட்ட நகைகளை  கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழ். சுற்றுலாத்துறைக்கு விசேட எரிபொருள் விநியோகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே. விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

’1001’ ஐ விட்டார் ஜனாதிபதி அனுர

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக மாத்திரம்  ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த விசேட அறை, செவ்வாய்க்கிழமை (24) முதல் பொதுமக்களின் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

“மிரட்டுகிறார்கள்” ; சிறையில் துடிக்கும் இம்ரான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவியை அதிகாரிகள் ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்துவதாகவும், அவரைப் பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏற்கெனவே, சிறையில் கண்பார்வை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் இம்ரான் கான், தற்போது மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளார்.